சிந்திக்க வைத்து… சிலிர்த்த நாடு சிலி

(தோழர் சாகரன்)

நெருப்பும் பனியும் நிறைந்த அற்புத பூமி என்று சொல்வார்கள் சிலி நாட்டை. அங்கு தீவிர வலதுசாரி அரசிற்கும் அதன் எதிர் கொள்கையுடைய இடதுசாரி செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிகள் மகத்தான வெற்றியீட்டியுள்ளார்கள். நாட்டின் இயற்கை அமைப்பைப் போலவே அரசியல் செயற்பாடும் அங்கு அமைத்திருப்பது இயற்பியல் அதிசயமாக அரசியல் அவதானிகளால் ஒப்பீட்டுப் பார்க்கப்படுவதுண்டு.