சிந்திக்க வைத்து… சிலிர்த்த நாடு சிலி

1973 செப்ரம்பர் 11, நிக்சனின்(Richard Nixon) அமெரிக்க சிஐஏ இன் வழி நடத்தலின்படி சோசலிச ஜனாதிபதி சால்வடார் அலெண்டே(Salvador Allende) ஐ கொலை செய்து ஜெனரல் அகஸ்டோ பினோசேவின்(Jose Antonio Kast.) இராணுவ ஆட்சி உருவாக்கப்பட்டது.

இதனை அன்றைய அமெரிக்க இராஜதந்திரி ஹென்றி கிசிங்கர் (Henry Kissinger) பிற்காலத்தில் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டதே வரலாறு. இதனைத் தொடரந்து நடைபெற்ற அப்பாவிப் பொது மக்கள் கொலைகள் இன்றுவரை சிலி மக்கள் உலக மக்களின் மனங்களில் இருந்து அகலவில்லை.

இதன் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட அமெரிக்க சார்பு வலதுசாரி ஆளும் வர்கத்தின் ஆட்சியும் வேறு வேறு தலமைகளில் சிலி இல் இத் தேர்தல் வரை தொடர்ந்ததுதான் வரலாறு.

உலகமே தனது கண்டனத்தை தெரிவித்த அலெண்டே(Salvador Allende) இன் கொலைக்கு பின்பு அரை நூற்றாண்டு காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசீர்வாதத்துடன் கொட்டம் அடித்து ஆட்சியில் இருந்து வலதுசாரி அரசை மக்களின் விடாப்பிடியான போராட்டம் இன்று தோற்கடித்துள்ளது.

அதுதான் இந்த தென் அமெரிக்க, மத்திய, லத்தீன் அமெரிக்க நாடுகளின் சிறப்பு. அவர்கள் எப்போதும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு… ஏகாதிபத்திய சுரண்டலுக்கு… எதிராக விடாப்பிடியாக போராடிக் கொண்டே இருப்பார்கள்.

எந்தக் காலத்திலும் தங்கள் நிலங்களில் அமெரிக்காவின் பெரு நில உடைமையாளர்களின் கால்களை பதித்து அப்பாவி பொது மக்களின் வாழ்வியலை நாசம் செய்யும் நவதாராள கொள்கையை அனுமதிக்கமாட்டார்கள்.

தென் அமெரிக்காவைச் சேர்ந்த சிலி நாட்டில் புதிய அதிபர் தேர்வுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று முன் தினம் நடந்தது. இதில் சமூக ஒருங்கிணைப்பு கட்சியைச் சேர்ந்தவரும், இடதுசாரி முன்னாள் மாணவர் தலைவருமான, கேப்ரியல் போரிக்(Gabriel Boric), தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சியைச் சேர்ந்த, அமெரிக்க சார்பு ஜோஸ் அன்டோனியா காஸ்டை(Jose Antonio Kast) விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இத்தேர்தலில் கேப்ரியலுக்கு 56 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. முதற்கட்ட ஓட்டுப் பதிவில் பெற்ற வாக்குகளை விட இரண்டாம் கட்டத்தில் 12 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று கேப்ரியல் போரிக் வெற்றி பெற்றுள்ளார்.

சிலியின் கடந்தகால இராணுவ சர்வாதிகாரத்தைப் பாதுகாத்த வரலாற்றைக் கொண்ட காஸ்ட், கடந்த மாதம் நடந்த முதல் சுற்று வாக்கெடுப்பில் கேப்ரியல் போரிக்கை விட இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

ஆனால் பெரும்பான்மை வாக்குகளைப் பெறத் தவறினார். இது சிலி நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப இரண்டாம் கட்டமாக இரு வேட்பாளர்களுக்கு இடையில் மீண்டும் தேர்தல் என்ற நிலையை உருவாக்கியது. இதற்கான பிரச்சாரத்தில் கிராம மக்களிடம் அதிகம் கவனத்தை செலுத்திய கேப்பரியல் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டார்.

இம்முறைத் தேர்தல் மிகவும் (இரு)துருவப்படுத்தப்பட்ட தேர்தலாக அமைந்தது என்று சர்வதேச அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். நாட்டில் அடிக்கடி வன்முறை போராட்டங்களுக்குப் பிறகு இப்போது இது வந்துள்ளது.

மூன்று தசாப்தங்களில் நாட்டின் எதிர்காலம் குறித்த முற்றிலும் மாறுபட்ட பார்வையை வழங்கிய இரண்டு வேட்பாளர்கள் ஒருவரையொருவர் எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும், அதுவும் தென் அமெரிக்காவில் அரசியல் மற்றும் அதன் பொருளாதாரக் கருத்துகளின் ஸ்திரத்தன்மைக்கு பெயர் பெற்ற ஒரு நாட்டில் நடைபெற்று இருக்கின்றது.

வலதுசாரி அரசின் சமத்துவமின்மையை அதிகம் ஏற்படுத்திய சந்தைப் பொருளாதாரத்தின் சீரழிவுகளை தனது தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய கருப் பொருளாக கேப்ரியல்(Gabriel Boric) கொண்டிருந்தார். இந்தப் பிரச்சாரம் விளிம்பு நிலை மக்கள், கிராம மக்கள் இடையே அதிக வரவேற்பை பெற்றது.

சிலி நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த மாபெரும் போராட்டம் நாட்டையே உலுக்கியது. தரமான கல்வி, உதவி தொகை அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்நிறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. சிலி அரசுக்கு எதிரான தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தவர்களில் முக்கிய நபரான போரிக் தான் தற்போது அந்நாட்டின் புதிய அதிபர்.

இந்த போராட்டம் தான் தற்போது பதவியிலிருந்து வெளியேறும் அதிபரை, அரசியல் அமைப்பையே மாற்றி அமைக்கும் வாக்கெடுப்பு நடத்தும் நிலையையும் உருவாக்கியது.

பெரும்பான்மையான சிலி மக்கள் இந்த வாக்கெடுப்பில் 1980 உருவாக்கப்பட்ட பிற்போக்குத்தனமான அரசியல் அமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்க ஆதரவு அளித்தனர். புதிய அரசியல் அமைப்பு வரும் 2022 ஆம் ஆண்டு மத்தியில் உருவாக்கப்பட்டு வாக்களிப்புக்கு விடப்படவுள்ளது.

பொது சுகாதார அமைப்பு, மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி, பெரும் செல்வந்தர்களுக்கு அதிகவரி, தனிநபர் உதவித்தொகை அதிகரிப்பு, சுற்றுச் சூழலைப் பாதுகாப்பை மேம்படுத்தல் உள்ளிட்ட கேப்ரியல் போரிகின் தேர்தல் வாக்குறுதிகள் இளைஞர்களிடம் வரவேற்பை பெற்றது.

வீச்சாக ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உணர்ந்தும் பிரச்சாரம் 2019 அளவில் மக்களிடையே சமூக எழுச்சியாக மாறி கேப்ரியல் இன் வெற்றியை உறுதி செய்துள்ளது.

‘சிலியின் எதிர்காலத்திற்கான தனது கொள்கையை எதிர்த்தவர்கள் உட்பட அனைத்து சிலி மக்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பேன் என்று கேப்ரியல் போரிக் உறுதியளிக்கிறார், மேலும் எதிர்காலம் அனைவருக்கும் சிறப்பாக இருக்கும் இதன்பால் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக் முடியும்’ என்றும் தான் நம்புவதாக தேர்தல் வெற்றியின் பின்பு கருத்துரைதுள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த புதிய அதிபர் கேப்ரியல் சிலி இல் நிலவி வந்த சர்வாதிகார ஆட்சி முறைக்கு முடிவு கட்டியுள்ளதாகவும் ஐரோப்பிய நாடுகளைப் பின்பற்றி சமூக ஜனநாயக ஆட்சி முறை அமல்படுத்தப்படவுள்ளதாகவும் தேர்தல் பிரசாரத்தின் போது கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுபோம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

கூடவே வறுமை ஒழிப்பு, சமத்துவ சமூகம், புதிய அரசில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் ஆகிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.

மாணவர் போராட்டங்களின் செயற்பாட்டாளரான போரிக் இளம் வயதில் சிலி இல் சட்டசபையில் உறுப்பினராக இருபது வயதுகளில் மக்களின் தெரிவால் இணைத்துக் கொண்டவர் கேப்ரியல். தனது 35 வயதில் அந்த நாட்டின் தலைவராக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு சிலி இன் உள்ள புண்டா அரினாஸைப் பூர்வீகமாகக் கொண்ட கேப்ரியல் போரிக் ஒரு மாணவராக சிலி இன் தலைநகர் சாண்டியாகோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கூட்டமைப்பை உருவாக்கி அதனை வழி நடத்தியதாக தனது பொதுவாழ்வை 20 களில் ஆரம்பித்தார். பொது வாழ்வில் காட்டிய இடுபாடு அவர் தனது சட்டக் கல்வியை இதுவரை பூர்த்தி செய்ய முடியவில்லை. கூடவே காதலுடன் திருமணம் ஆகாத வாழ்வியலையும் கொண்டுள்ளார்.

2011 அவர் நடாத்திய மேம்படுத்தப்பட்ட குறைந்த செலவிலான கல்வி அனைவருக்கும் என்பதை முன்னிறுத்தி நடாத்திய போராட்டம் சிலி இல் கோடீஸ்வரர்கள் மாத்திரம் பெற்று வந்த கல்வி அனைவருக்குமானது என்ற வகையில் அமைந்தது. இது மாணவர்கள், மக்கள் மத்தியல் அதிக வரவேற்பு வீச்சை ஏற்படுத்தியது.

சிலி நாட்டின் இடதுசாரித் தந்தை என்று மக்களால் நேசிக்கப்பட்ட அலன்டே இன் கொலைக்கு காரணமான ஜெனரல் அகஸ்டோ பினோசேயின் (1973-1990) சர்வாதிகாரத்தால் விட்டுச் சென்ற நவதாராளவாத பொருளாதார செயற்பாட்டை புதைகுழியிற்குள் அனுப்பப்போவதாக அவர் உறுதியளிதத்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

இந்த தேர்தல் வெற்றியின் பின்பும் சிலியில் வலது மற்றும் இடதுசாரிகளுக்கு இடையே ஒரு முறுகல் நிலை ஏற்படும் என சிலி இன் கடந்த கால வரலாறு கூறி நிற்கின்றது.

ஜனாதிபதி நாட்டின் தலைவராக இருக்கும் அதே வேளை மேற்சபை கீழ்சபை என் கிட்டத்தட்ட இரு சபைகளை தன்னத்தே கொண்ட ஆட்சி முறையை கொண்டுள்ளது சிலி இன் அரச அமைப்பு.

காஸ்ட்(Jose Antonio Kast) தோற்றுவிட்டார் என்பது அவர் அரசியல் மேடையில் இருந்து முற்றிலும் விலகிவிட்டார் என்று அர்த்தமல்ல. நாடாளுமன்றத் தேர்தலில் அவரது வலதுசாரிக் கட்சி பலம் பெற்றதாக இருப்பதும் செனர் சபையிலும் கணிசமான ஆசனங்களை கொண்டுள்ள வலதுசாரிகள் கொண்டிருப்பதும் கேப்ரியல் போரிக் இன் ஆட்சியிற்கான முட்டுக் கட்டைகளை போட்டவண்ணம் இருப்பர்.

இதற்கு அமெரிக்காவும் தனது கொல்லைப் புற குழப்படிகளை தாராளமாக வழங்க முன்வரும் ஆனாலும் தென் அமெரிக்க லத்தீன் அமெரிக்க நாட்டு மக்களின் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு விடாப்பிடியான இடதுசாரிக் கொள்கை செயற்பாடு தமது நட்பு நாடுகளுடனான உறவு ஆதரவு அவர்களை வாழவைக்கும் ஆட்சியைத் தொடர வழி வகிக்கும்.

லத்தீன் அமெரிக்க நாடுகளான கியூபா நிக்கரகுவா பொலிவியா ஹொன்ராஸ் வெனிசுலாவை பெரு தொடர்ந்து சிலியிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இடதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.

மக்கள் ஆதரவுடனாக ஆட்சியில் நெருப்பையும் பனியையும் ஒருங்கே கொண்டிருக்கும் வாழ்வியலைக் கொண்ட மக்களே இறுதியில் வெல்வர் என்ற நம்பிக்கை எமக்குண்டு அதற்கான தலமைத்துவத்தை 35 வயதே ஆன இளம் தலைவர் கேப்ரியல் போரிக் வழங்குவார்.

தென் அமெரிக்க நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த வெற்றி சமத்துவ வாழ்வை ஆதரிக்கும் எமக்கு மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இதே மாதரியாக 35 வயதில் இணைந்த வடக்கு கிழக்கு மாணசபையின் ஆட்சிப் பொறுப்பு ஒரு இடதுசாரி சமூக ஜனநாயக அமைப்பின் முதல் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது என் நினைவில் இங்கு வந்து போகின்றது. அதுவும் வரலாறாகித்தான் இன்றும் இருக்கின்றது.

———————————————————————————————-

சிலி நாடு பற்றிய தகவல் குறிப்பை அறிய விரும்புபவர்கள் தொர்ந்தும் வாசியுங்கள்…….

சிலி: நெருப்பும் பனியும் நிறைந்த புவியியல் அற்புதம்

தென் அமெரிக்காவின் மேற்கு கரையில், ஆண்டஸ் மலைகள் மற்றும் பசிபிக் கடலுக்கும் இடையே அமைந்துள்ள சிலி, வடக்கில் பெரு என்ற நாட்டையும், வடகிழக்கில் பொலிவியா என்ற நாட்டையும், கிழக்கு எல்லையாக ஆர்ஜன்டினாவை கொண்டிருக்கிறது.

தாழ்வான பாலைவனம், செழிப்பான மழைக்காடுகள் என 4630 கிமீ மைல் நீளமான நிலப்பகுதியை கொண்டுள்ளது சிலி.

சிலியின் வரைபடத்தை பார்த்தால், அது நீண்ட, மெல்லிய குளிரையும் சூட்டையும் அளக்கும் பயன்படும் தேமமீற்றர் போல் தோற்றத்தை ஒத்திருக்கிறது. அனல் வீசும் வெப்பம் மற்றும் உறைய வைக்கும் குளிரை கொண்ட இந்த நாட்டில் பிரதான பேச்சுமொழி ஸ்பானிஸ். மூன்று வெவ்வேறான பழங்குடியினரை (Several indigenous languages spoken in Chile: Mapudungun, Aymara, Rapa Nui, Chilean Sign Language and (barely surviving) Qawasqar and Yaghan) தன்னத்தே கொண்ட நாடு இது

உலகில் அதிகமான எரிமலைகளை கொண்ட நாடுகளில் 2,000 தொடர் எரிமலைகளைக் கொண்டு சிலி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இங்கு, இருக்கும்.

நாட்டின் மிகவும் வறட்சியான பகுதியை வடக்குப்பகுதியில் பார்க்கலாம். பூமியின் மிக உயரமான இடத்தில், துருவப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள வறண்ட, 1000 கிமீ நீளமான ஆண்டெஸ் மற்றும் சிலியின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள மலைப்பகுதிகளுக்கு இடையில் ‘அடகாமா’ பாலைவனத்தையும் பார்க்க முடியும்.

இந்தப் பகுதியின் மழைப் பொழிவு ஆண்டுக்கு 15 மி.மீட்டர் மட்டும்தான். சில பகுதிகளில் இதுவரை மழை பெய்ததாக பதிவுகள் இல்லை. பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களால் சூழப்பட்டிருப்பதால் இங்கு ஈரப்பதமும் அரிதே.

தென் அமெரிக்க மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஆண்டெஸ், உலகிலேயே மிக நீளமான கண்ட மலைப்பகுதியாகும். தென் அமெரிக்காவின் முதுகெலும்பு என அறியப்படும் இது, உயிர்கள் வாழ்வதற்கு ஏதுவானதான இல்லாவிட்டாலும் பறவைகள் மட்டும் இங்கு வாழ்கின்றன.

அதாவது, சிலி நாட்டின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களில் பெரும்பாலானவை, உயர் நிலப்பகுதியைத் தாண்டி பயணம் செய்வதை மலைப்பகுதி தடுப்பதால் அவை இந்த நாட்டிற்கு மட்டுமே இருப்பனவை என்ற தனித்துவமான சிறப்பை பெறுகின்றன.

நாட்டின் தெற்குப் பகுதியை நோக்கி பயணித்தால், எரிமலை சாம்பல் மற்றும் உருகிவரும் நீரால் வளம் பெற்றிருக்கும் பசுமையான தாழ்நிலங்களை காணமுடியும். குவாணோக்கள் போன்ற பொதி ஒட்டகம், உலகின் மிகச் சிறிய மான் பியூடு போன்றவற்றிற்கு தாயகமாக விளங்குகிறது சிலி.

தெற்கு துருவ பனிவெளியில் இருந்து, மலைகளின் குறுக்கே 65 கிமீ பனிப்பாறை ஆறு பாய்கிறது.

விவசாயம் கடற்தொழில் கைவினைப் பொருட்கள் என்று தமது பொருளாதாரத்தை ஸ்திரமாக பேணுவதில் வல்லவர்கள் மக்கள் என்ற பண்பாட்டை உடையவர்கள். மிக அதிமாக கடல் உணவுகளை மரக்கறியுடன் இணைத்து சோத்துக் குழையலாக அமைந்த தென் அமெரிக்க நாட்டு மக்களின் பொது போக்கான உணவுகளை அதிகம் தமது பழக்க வழக்கமாக கொண்டுள்ளனர்.

கால பந்தாட்டம் இல்லாத வீடுகளை காண முடியாது. அது லத்தீன், தென் அமெரிக்காவின் கலாச்சாரமான கோலங்கள் இங்கும். வலைப் பந்தாட்டம் ரெனிஸ் மல்யுத்தம் என்று சரவதேச அரங்குகளில் தமது தடங்களையும் பதித்து வருபவர்கள் சிலி நாட்டு மக்கள்.