கடலை கண்டதில்லையா மலையக இளைஞர்கள்?

(மஹேஸ்வரி விஜயனந்தன்)

அண்மைக் காலமாக மலையக இளைஞர்களின் வீண் சாவு, அதிகமாக அதிகரித்துள்ளதை தினமும் ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்து துன்பப்படுவதா அல்லது இவர்களின் அறியாமையை நினைத்து வெட்கப்படுவதா என ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருப்பது நான் மட்டுமல்ல. என்னைப்போன்று மனித உயிர்க​ளின் பெறுமதியை உணர்ந்தவர்களும் நிச்சயம் இவ்வாறு தான் சிந்திப்பார்கள் என்பதில் ஐயமில்லை.