திணைகளுக்கென இசைவழங்கிய தமிழிசையும் அதை ஒத்த கிரேக்க இசையும் :

(TSounthar Sounthar)


பண்டைக்காலத்தில் வாழ்ந்து மறைந்த பல்வேறு நாகரீக மக்களின் தொடர்புகளும், கலப்புகளும் தங்கள், தங்கள் பங்களிப்பாக ஒவ்வொன்றையும் கொடுத்தும், பெற்றும் மனித நாகரீகத்தை வளர்த்துள்ளன. கால ஓட்டத்தில் அப்பங்களிப்பைச் செய்த நாகரீக மக்கள் மற்றும் அவர்களின் மூலங்கள் மறைந்தாலும் அவற்றின் தாக்கங்களையும், எந்தெந்த நாட்டு மக்கள் என்னென்ன கொடைகளை மாற்று இன மக்களுக்கு வழங்கினார்கள் என்பதையும் பிற்காலத்து ஆய்வறிஞர்களும், வரலாற்றறிஞர்களும் கண்டுபிடித்து விளக்கியுள்ளனர். இந்த உலகம் ஒரே ஒரு நாகரீகத்தால் வளர்ந்த ஒன்றல்ல.