யாரிடம் சொல்லியழ? பியர் குடித்த உயிர்

(எஸ். றொசேரியன் லெம்பேட்)

தலைமன்னார் பியர் பகுதியில், செவ்வாய்க்கிழமை (16) மதியம் இரண்டு மணியளவில், மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸூம் அநுராதபுரத்தில் இருந்து தலைமன்னாருக்குப் பயணித்த ரயிலும் மோதி விபத்துக்கு உள்ளாகியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்ததோடு மாணவர்கள், ஆசிரியர், பொது மக்கள் என 25 பேர் வரை காயமடைந்துள்ளனர்.