பரிஸ் கம்யூன்: உலகின் முதலாவது தொழிலாளர் புரட்சியின் 150ஆவது நினைவு தினம்!

(Maniam Shanmugam)

இற்றைக்கு 150 வருடங்களுக்கு முன்னர், 1871 மார்ச் 18ஆம் திகதி பிரான்சின் தலைநகர் பரிஸில் தொழிலாளி வர்க்கத்தின் முதலாவது புரட்சி இடம் பெற்றது. வரலாற்றில் முதல் தடவையாக அடக்கியொடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட மக்களான தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை தமது கைகளில் எடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க சம்பவம் அரங்கேறிய நிகழ்ச்சி இது.