மரம்

மதுரையின் மிகப் பிரபலமான மரக்கடை குடும்பத்தாரின் மகன் எனது பள்ளிக் காலத்து நண்பன். அவரை பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் சந்தித்தேன். பள்ளியில் படிக்கும் போதே அவர் எங்களை விட இரண்டு வயது பெரியவர். எல்லோரும் அவரை பெருசு என்றே அழைப்போம். படிப்பு சரியாக வராது. கடுமையாக மனப்பாடம் செய்தாலும் பரிட்சையில் கோட்டை விட்டு விடுவார்.