இந்தோனேசியாவில் இனப்படுகொலை

இந்தோனேசியாவில், பல இலட்சம் கம்யூனிச சந்தேகநபர்கள் அழிக்கப் பட்ட இனப்படுகொலை பற்றிய ஆவணப்படும் நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இனப்படுகொலையில் பங்கெடுப்பதற்காக, கத்தோலிக்க இளைஞர்களை அணிதிரட்டிய, டச்சு – கத்தோலிக்க பாதிரியார் பற்றி அதிலே அதிக கவனம் செலுத்தப் பட்டது. நெதர்லாந்தை சேர்ந்த எசுயிஸ்ட் பாதிரியார் யோப் பேக் (Joop Beek) சர்வாதிகாரி சுகார்த்டோவுக்கு நெருக்கமானவராக இருந்தார். கத்தோலிக்க மாணவர்களை அணிதிரட்டி கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான இனப்படுகொலையில் பங்கெடுக்கச் செய்தார்.

இந்தோனேசிய இனப்படுகொலையில், இந்தோனேசிய இராணுவம் மட்டுமல்லாது, CIA, மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும் பங்கெடுத்தன. கத்தோலிக்க திருச்சபையும் இனப்படுகொலையில் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது.

பொதுத்தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப் பட்ட ஜனாதிபதி சுகார்னோ, இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சியால் ஆதரிக்கப் பட்டு வந்தார். சீனா, வியட்நாம், கம்போடியாவை அடுத்து, இந்தோனேசியாவிலும் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்திற்கு வந்து விடலாம் என்ற அச்சம் நிலவியது.

அமெரிக்காவும், மதவாதிகளும், இலட்சக் கணக்கான கம்யூனிஸ்ட் சந்தேகநபர்களை இனப்படுகொலை செய்வதன் மூலம், கம்யூனிச அபாயத்தை தடுக்க நினைத்தார்கள். சுகார்ட்டோ தலைமையிலான இராணுவ ஆட்சிக்கு ஆதரவளித்தனர். கம்யூனிசத்தை தடுப்பதற்காக, அமெரிக்காவும், இஸ்லாமிய, கிறிஸ்தவ மதவாதிகளும் கூட்டுச் சேர்ந்து, இனப்படுகொலை நடத்தவும் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இந்தோனேசியா ஒரு உதாரணம்.

ஆவணப் படத்தை பார்ப்பதற்கு:
De coup van ’65
http://www.npo.nl/de-coup-van-65/25-09-2015/KN_1674015

(Kalaiyarasan Tha)