இலங்கையின் நெல் உற்பத்தியை ஊக்குவிக்க 4.6 மில். அமெ. டொலர் உதவி

இலங்கையின் உலர் மற்றும் இடைவெப்ப வலயங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களிலுள்ள சிறு நெல் விவசாயிகளின் உற்பத்தித் திறனை வலுவூட்டுவதற்கு 4,629,629 அமெரிக்க டொலர்களை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினூடாக (FAO) ஜப்பான் அரசாங்கம் வழங்கிவருகிறது.