இலங்கை: கொரனா செய்திகள்

வடமராட்சி கொத்தணிக்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத் தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – வடமராட்சி, புலோலியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே, வடமராட்சி கொத்தணிக்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சுகாதாரத் தரப்பினர் தெரிவித்தனர்.