இலங்கை: கொரனா செய்திகள்

எதிர்வரும் செப்டம்பர் 20ஆம் திகதிவரை நாட்டை முடக்கும்படி ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று (12) நடந்த ஊடக சந்திப்பில் பேசிய எஸ்.எம் மரிக்கார் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். நாட்டில் உள்ள அபாயகரமான சூழ்நிலையை மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்த போதிலும் அரசாங்கம் ஏன் இன்னும் நாட்டை முடக்கும் தீர்மானத்தை எடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.