ஈரான் புதிய ஜனாதிபதியாக றைசி பிரகடனம்

ஈரானின் எட்டாவது ஜனாதிபதியாக, கடும்போக்குவாத நீதித்துறைத் தலைவரான இப்ராஹிம் றைசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு உள்நாட்டமைச்சு அறிவித்துள்ளது. 48.8 சதவீதமாக காணப்பட்ட வாக்களிப்பு வீதத்தில், 61.95 சதவீதமான வாக்குகளை றைசி வென்றுள்ளதாக உள்நாட்டமைச்சு இன்று அறிவித்துள்ளது.