உருத்திரபுர தொல்லியல் அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

கிளிநொச்சி – உருத்திரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த தொல்லியல் அகழ்வு நடவடிக்கை, தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. உருத்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள உருத்திரீஸ்வரர் கோவில் வளாகத்தில் அகழ்வுப் பணி மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம், மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்ந்தது.