ஐந்து தமிழ் கட்சிகளின் சந்திப்பை சி.வி, சுரேஷ் புறக்கணிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக ஐந்து தமிழ் கட்சிகளும் இன்று (24) கொழும்பில் கூடவிருந்த நிலையில், வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரஷ் பிரேமசந்திரன் ஆகியோர் கலந்துகொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.