கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுயதனிமை

கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுயதனிமைக்கு தன்னை உட்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவுக்கு இன்று(18) கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து, கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள், சிறுவர் மேம்பாடு, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதென அமைச்சின் ஊடகச் செயலாளர் தெரிவித்தார்.

மேலும் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்தவின் மனைவி மற்றும் மகனுக்கும்  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் மூவரும் நாகொட பிரதேசத்திலுள்ள சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்துடன், இராஜாங்க அமைச்சரின் அலுவலக சபையினர் 10 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.