காணாமல் போனோரின் உறவினர்கள் உண்ணாவிரதம்

காணாமல் போனோரின் உறவினர்கள், சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை வவுனியாவில் ஆரம்பித்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை முன்வைத்து இடம்பெற்று வரும் இப்போராட்டம், வவுனியா கந்தசாமி கோவிலில் வழிபாடுகளுடன் நேற்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது. காணாமல் போனோரின் உறவினர்கள், கந்தசாமி கோவிலில் தேங்காய் உடைத்து வழிபட்டதன் பின்னர், ஊர்வலமாக வவுனியா பிரதான தபாலகத்துக்கு முன்பாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்தனர்.