குற்றாச்சாட்டுகளுக்கு விக்னேஸ்வரன் பதில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் தன்னுடன் கோபமுற்றுள்ளதாக கூறி மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் குறித்த வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் மறுப்புத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பிலுள்ள தலைவர்களிடையே மோதலை உண்டாக்கும் நோக்கிலேயே குறிப்பிட்ட சிலரால் இவ்வாறான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாக சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தேர்தல் பிரசாங்களின்போது தான் பங்கேற்காததால் த.தே.கூ தன்னுடன் கோபமுற்றிருப்பதாகவும் அதன் காரணமாக தன்னை பதவி விலக்க அவர்கள் முயற்சி செய்வதாகவும் கூறப்படும் செய்திகள் குறித்து பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் இவ்வாறானதொரு பிரச்சினையோ அல்லது முரண்பாடுகளோ த.தே.கூட்டமைப்பிற்குள் இல்லை எனவும் கூட்டமைப்பிலுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தன்னுடன் சுமுகமான முறையிலேயே பழகுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.