சிலியில் தீ : 14 பேர் பலி

சிலி நாட்டின் தெற்கு நகரமான கொரோனலில் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், தகர கொட்டகைகள் அமைத்தும், மரத்தால் வீடுகளை உருவாக்கியும் வசித்து வருகின்றனர்.  இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குள்ள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.