டைட்டானிக்

டைட்டானிக் விபத்து நடந்து ஒரு நூற்றாண்டு கடந்தும் இன்னும் அது ஒரு பேசுபொருளாகவே இருக்கும் நிலையில் டைட்டானிக் ship wreck இனை தனியார் நீர்மூழ்கி உல்லாசப் பிரயாண சேவையான Oceangate Titan சப்மரைனில் பார்க்க சென்ற ஐந்து செல்வக் கோமான்கள் மற்றும் அதை இயக்கிய பைலட் விபத்தில் சிக்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் உலகமே அங்கலாய்த்து கொண்டிருக்கிறது.
ஐக்கிய இராச்சியத்தின் பிரஜைகளான பில்லியனர் ஹமிஸ் ஹார்டிங் இவர் டுபாயை மையமாகக் வைத்து விமானங்கள் வாங்கி அதை லீஸிங் கொடுக்கும் தொழிலை செய்பவர்.