டைட்டானிக்

பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானிய பிரஜை பாகிஸ்தானில் இரசாயன தொழிற்சாலை பெட்ரோலிய மற்றும் விவசாய உரம் தயாரிப்பு தொழில்களில் கொடி கட்டிப் பறப்பவர் ஷஹ்ஸாதா தாவூத் அவரின் மகன் 19 வயது மகன் சுலைமான் தாவூத்.

சுலைமான் தாவூத் ஒரு பொறியாளர் மற்றும் சட்டத்தரணி மிகப் பெரிய கொடையாளி ஐக்கிய நாடுகள் சபை, World Economic Forum, மற்றும் பிரசித்தி பெற்ற Oxford Union இல் உரையாற்றியவர்.

Oceangate நிறுவனத்தின் CEO ஸ்டொக்டொன் ரஷ் மற்றும் மிஸ்டர் டைட்டானிக் என்று அழைக்கப்படும் பிரெஞ்சு ஆழ்கடல் ஆய்வாளர் போல் ஹென்றி ஆகியோர் இந்த விபத்தில் சிக்கியிருக்கிறார்கள்.
கனடா அமெரிக்கா ஐக்கிய இராச்சியம் இணைந்து பாரிய தேடுதல் வேட்டையை முடக்கி விட்டிருக்கிறார்கள்.

உலகின் மிகவும் பலமான சமுத்திர மீட்கும் பொறி USS Washington இனால் 210 மீற்றர் ஆழம் வரை நேரடியாக Rescue operation செய்ய முடியும் அதற்கு கீழே தன்னியக்க ரோபோக்கள் கொண்ட நீர்மூழ்கி கப்பல்களால் மட்டுமே Rescue operation சாத்தியமாகிறது.

உலகில் இதுவரை செய்யப்பட்ட ஆழமான Rescue operation 1973 இல் 1540அடி ஆழத்தில் செய்யப்பட்டதாக அறியக் கிடைக்கிறது. இதன் போது 76 மணிநேர Rescue Mission மூலம் Under Sea cable laying பணியில் இருந்த இரண்டு பிரித்தானிய பொறியாளர்கள் மீட்கப்பட்டனர்.

ஆனால் இந்த விபத்தின் ஆழம் 12500 அடி என்று தகவல்கள் வருகின்றது. இதுவே மீட்பு நம்பிக்கைகளை தர்த்து எறிகின்றது.

பிரித்தானிய நேரத்தின் படி 12.08 அளவில் எமர்ஜென்சி ஒக்ஸிஜன் தீர்ந்து விடும் அதற்கு இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளது. அந்த ஆழத்தில் இருந்து அத்துடன் கடல் மட்டத்தை அடைய ஆகக் குறைந்தது நான்கு மணித்தியாலங்கள் தேவை. எனவே எவரும் உயிருடன் மீட்கப்படுவதன் சாத்தியம் தெய்வீக அதிசயம் என்று மீட்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.