தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது

பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டன் போலீஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனக் கூறப்படுகிறது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சட்டபூர்வ நடவடிக்கைகளை பிரிட்டன் அதிகாரிகள் துவக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த சட்ட நடவடிக்கைகளின் மூலம் அவர் இந்தியா திரும்புவாரா என்பதை உறுதிப்படுத்த முடியாது. ஏனெனில் இந்தியா – பிரிட்டன் இடையேயான நாடுகடுத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கைதாகும் நபருக்கு சில உரிமைகள் இருக்கின்றன எனக் கூறப்படுகிறது.