நிரபராதிகள் மீதான அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தன தாக்குதல்

ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக ஒரு மாதகாலமாக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட ‘கோட்டா ஹோ கம’, அலரிமாளிகையின் முன்பாக 13 நாள்களாக நடத்தப்பட்ட ‘மைனா ஹோ கம’ மீது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் குண்டர்களால் நேற்று (09) மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை கண்டிக்கத்தக்கவை. உலக வங்கி, மனித உரிமை நிறுவனங்கள் உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள், நாடுகள் இத்தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளன.