நேபாள நாடாளுமன்ற கலைப்பைக் கோரியுள்ள அமைச்சரவை

அவசரநிலை சந்திப்பொன்றில் நாடாளுமன்றத்தை கலைக்க நேபாள அமைச்சரவை இன்று பரிந்துரைத்துள்ளது. பெரும்பான்மை ஆதரவை பிரதமர் கே.பி. ஷர்மா ஒளி இழந்து விட்டதாக அவரின் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்த நிலையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.