பிரசாந்தனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோரை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். 2008ஆம் ஆண்டு காத்தான்குடி, ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில்; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.