பிரியங்கா காந்தி

கடந்த சில மாதங்களாக உத்திரப்பிரதேச அரசியலை கூர்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தெரியும். உத்திரப்பிரதேச அரசை தீவிரமாக எதிர்த்து மக்களுக்கு ஆதரவான போராட்டக் களத்தில் நிற்பவர்கள்
பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களான மாயாவதி,அகிலேஷ் யாதவ் அல்ல. பிரியங்கா காந்தி தான்.

குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர் துயரத்தில் தீவிரமாக துணைநின்றவர். இதற்காக அவர் மீது,உ.பி. காங்கிரஸ் கமிட்டி தலைவர் மீதும் ஏராளமான வழக்குகள்,கைதுகள்.

உத்திரப்பிரதேச அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக பிரியங்கா காந்தி உருவெடுத்து வருகிறார். தேசிய அரசியலில் தெளிவான இடம் இருந்தும் உத்திரப்பிரதேச அரசியலில் காங்கிரஸ் கட்சி தனக்கு இட்ட அரசியல் பணியை அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார் பிரியங்கா.

இதைப் பொறுக்கமுடியாத மோடி அரசு பிரியங்காவின் பாதுகாப்பு கருதி அரசு வழங்கிய வீட்டை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

சுற்றிப்பார்த்தாலே கால்வலி எடுக்கும் ஆனந்த பவனம் மாளிகையையே நாட்டுக்கு அர்ப்பணித்த குடும்பம் இந்த அல்பத்தனத்திற்கா அஞ்சிவிடப்போகிறது.

பிரியங்கா காந்தி தான் இந்திராவின் பேத்தி என்று நிரூபிப்பார். அந்த பயம் தான் பிஜேபியை விரட்டுகிறது.