பொது கழிப்பறை கட்டணம் அதிகரிப்பு

புதிய வரித் திருத்தங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. நீர் கட்டணம் அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு பொதுக் கழிப்பறைக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணம் பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 20 ரூபாயாக இருந்த கழிவறை கட்டணம் புதிய திருத்தத்தின் கீழ் 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.