மக்களின் முகங்களைமுன் நிறுத்துவோம்! – தமிழர் சமூக ஜனநாயககட்சி(SDPT)

 

எதிர் வரும் உள்ளுராட்சி தேர்தலில் சுடரும் மெழுகுதிரிச்சின்னத்தில்மட்டுநகர் மாநகரசபை- மட்டுநகர் மண்முனைமேற்குபிரதேச சபை-திருமலைநகர சபை -திருமலைபட்டினமும் சூழலும் பிரதேச சபை -சாவகச்சேரிநகர சபை-சாவகச்சேரிபிரதேச சபை-ஆகிய6 இடங்களில் தமிழர் சமூக ஜனநாயககட்சிபோட்டியிடுகிறது.

ஒளிபடைத்தகண்களும் உறுதி உள்ளநெஞ்சும் கொண்ட யுவதிகளும் இளைஞர்களும் வெற்றிபெறவேண்டும்!

சுத்தமானஊர்கள! தூய குடிநீர்!!நோயற்றவாழ்வு!!!
மக்கள் சினேகிதமான நிர்வாகம்!வன்முறையிலிருந்து விடுதலை!!
பெண் ஆண்- பால்நிலை சமத்துவம்! சமூக ஒற்றுமை!! பாதுகாப்பானவாழ்வு!!!
கூட்டுறவுத்துறைமீள் எழுச்சி !
நலிவுற்ற சனசமூகநிலையங்களின்,மாதர்சங்கங்களின்
புத்துயிர்ப்பு!!
ரம்மியமானசூழலில் தரமான சிறார்கல்வி!
பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் சமூகபாதுகாப்பு!!
உள்ளக வீதிகள்நிர்மாணம் சமூக நீதி மறுக்கப்பட்ட மக்களின் வாழிடங்களில் இருந்து தொடங்குவது!
சமூகவலி அறியும் வலி சுமக்கும் சாமனியர்களின் பிள்ளைகளிடம் அதிகாரம்.
லீசிங் கம்பனிகளின் பேரிலான அடாவடிதனங்கள் சுரண்டலில் இருந்து கிராமங்கள் விடுவிக்கப்படவேண்டும்!
மாதர் கவுரவம் பாதுகாப்பு!!
கடந்தஉள்ளூராட்சி சபைகளில் சுனாமிவேக சூறையாடலில் ஈடுபட்ட திருட்டுகும்பல் வேண்டாம்!
தமிழர்களின் அரசியல் பொருளாதார சமூக வாழ்வை பிரக்ஞையுடன் துரதிருஸ்யுடன் சாதுரியமாக கடந்த அனுபவ பாடங்களுடன் உறுதிப்படுத்துவோர் வேண்டும்!!
மனதினில் ஒளிஉண்டானால் வாக்கினில் ஒளி உண்டாம்”
பத்மநாபாஈபிஆர்எல்எப் இன் பாரம்பரியத்தில் உதித்த தமிழர் சமூக ஜனநாயககட்சி.

தலைவர்

தி.ஸ்ரீதரன்
தமிழர் சமூக ஜனநாயககட்சி(SDPT)