மத்திய மாகாணத்தில் 30,812 பேர் உயர்தரத்துக்கு தகுதி

அதனடிப்படையில் கண்டி மாவட்டத்தில் 22,023 பரீட்சாத்திகளும், மாத்தளை மாவட்டத்தில் 7,836 மாணவர்களும், நுவரெலியா மாவட்டத்தில் 11,403 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். 

இவர்களில் மாத்தளை மாவட்டத்தில் 5,590 மாணவர்களும், கண்டி மாவட்டத்தில் 16,923 மாணவர்களும் , நுவரெலியா மாவட்டத்தில் 8,299 மாணவர்களும் க.பொ.த உயர்தரத்திற்கு தகுதிப்பெற்றுள்ளனர்.

இதனடிப்படையில் மாத்தளை மாவட்டம் 71.34 வீதமும், கண்டி மாவட்டம் 76.84 வீதமும் , நுவரெலியா மாவட்டம் 72.78 என்ற மாவட்ட வீத வளர்ச்சியும் காட்டுவதை அவதானிக்க முடிவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.