யாழ். மரக்கறி சந்தை தொகுதிக்குப் பூட்டு

யாழ்ப்பாணம் மாநகர மரக்கறிச் சந்தைத் தொகுதி, மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரமே, இவ்வாறு மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.