மோடியும், டாக்ஸி ட்ரைவரும்

நேற்று உயிர்மை பதிப்பக விழாவிற்காகச் சென்னைக்குப் போயிருந்தேன். மதிய நேரம் என் மகள் வீட்டுக்குப் போய்விட்டு, மாம்பலத்தில் உள்ள லாட்ஜுக்குத் திரும்பிட, ஊபர் கேப்ஸ் மூலம் கார் பதிவு செய்தேன். வந்த காரில் ஏறினேன். 40 வயது மதிக்கத்தக்க டிரைவர் என்னிடம் சொன்னார். ‘’ சார் தயவுசெய்து Paytime-இல் புக் பண்ணாதீங்க. எல்லாரும் அப்படித்தான் செய்யுறாங்க. வண்டிக்குப் பெட்ரோல் போடணும் . தயவுசெய்து பணமாகத் தாங்க” என்று கெஞ்சினார்.

நான்” ஏன் உங்க கம்பெனி பணம் தராதா’ என்றேன். அவர் ’’வாரத்துக்கு ஒருமுறை தான் பணம் தரும். அதை எடுக்க கரூர் வைசியா பேங்க் போனால் பணம் இல்லைங்கிறாங்க’’ என்றார். அப்புறம் அவர், சார் இவனுக்கு எல்லாம் நல்ல சாவே வராது சார் என்று தொடங்கி அதிகபட்ச கெட்ட வார்த்தைகளால் மோடியைத் திட்டிக்கொண்டே காரை ஓட்டினார். இவனெல்லாம் விளங்கவே மாட்டானுக சார் என்று கொந்தளித்தவரைச் சமாதானப்படுத்த என்னிடம் எந்தச் சொற்களும் இல்லை. அன்றாடம் வாடகைக் கார் ஓட்டி கௌரவமாக வாழ்கிறவரின் நம்பிக்கையைச் சிதைத்த மோடிக்கு இது வேண்டியதுதான் என்று தோன்றியது. டிரைவருக்குப் பணம் தந்துவிட்டுக் காரில் இருந்து இறங்கிய பின்னரும் அந்த டிரைவரின் முகத்தில் வெளிப்பட்ட கோபமும் வசைச்சொற்களும் இன்னும் என்னைத் தொடர்கின்றன.

(Murugesa Pandian Natarajan)