1.5 டிகிரி

2015 பாரிஸ் உடன்படிக்கையின்படி உலக நாடுகள் வெப்ப உயர்வை 2 டிகிரி அளவிற்குள் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டன. இதை நிறைவேற்ற வளர்ந்த நாடுகள் தரப்பில் உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், 1.5-2 டிகிரி வரையறைக்குள் புவி வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்தவேண்டும் என்பதே கிளாஸ்கோ மாநாட்டின் முதன்மைக் குறிக்கோள். 1.5 டிகிரி செல்சியஸ் என்பது மனிதகுலத்தினால் தாங்கிக் கொள்ளக்கூடிய பாதுகாப்பான வெப்ப உயர்வு அளவே.

இதில் அரை டிகிரி அதிக வெப்ப உயர்வு கூட பூமிக்கு அழிவைத் தேடித்தரும் என்று உலகின் தலைசிறந்த காலநிலை நிபுணர்கள் சமீபத்தில் வெளியான ஐபிசிசி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். பூமி இரண்டு டிகிரிகள் சூடானால் உலகில் 420 மில்லியன் மக்கள் கூடுதலாக வெப்ப அலை பாதிப்பு களுக்கு உள்ளாவார் என்று கணினி மாதிரிகள் கூறு கின்றன. இதனால் மரணங்கள் இரண்டு மடங்கு அதிகரிக்கும்.

அரை டிகிரி சூடு அதிகரித்தால் கூட நீர்ப் பற்றாக் குறை, பசி, வறுமை ஆகியவற்றை உலகளவில் குறிப்பாக சஹல் (Sahel), அமேசான், தென்னாப்பி ரிக்கா, மத்திய ஐரோப்பா, மத்தியத்தரைக்கடல் போன்ற வறுமை தாண்டவமாடும் பகுதிகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவுப் பாதுகாப்பு நிலைமை மோசமடையும். வறட்சி அதிகரிக்கும்.

ஆப்பிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா, பிரேசில், மெக்சிகோ பகுதிகளில் பொருளாதாரம் சீரழியும். இரண்டு டிகிரி வெப்ப உயர்வு சம்பவிக்கும்போது பூமியில் உள்ள 18% பூச்சிகள், 16% தாவரங்கள், 8% முது கெலும்பிகள் தங்கள் வாழிடத்தில் 50% இடங்களை இழந்துவிடும். 1.5 வெப்ப உயர்வில் ஏற்படும் வாழிட இழப்பை விட இது இரு மடங்கு.

இதனால் உணவு உற்பத்தி, மகரந்தச்சேர்க்கை, நீரின் தரம், மற்ற பூமி யின் உயிர்காக்கும் உயிரியல் ரீதியிலான கூறுகள் (Earth’s biological components) பாதிக்கப்படும். அமேசான் போன்ற பசுமைமாறா வனங்கள் அழிந்து வறண்ட பூமியாக மாறிவிடும்.

எரியும் அடுப்புவெப்பமான நாட்கள் மாதக்கணக்கில் நீண்டு செல்லும். வறண்ட காலநிலை நிலவும் காலம் இரு மடங்காக உயரும். அதிதீவிர காலநிலை மும்மடங்காக அதிகரிக்கும். இரண்டு டிகிரிகள் வெப்பம் அதிகரித் தால் கடல்களில் அமிலத்தன்மை, ஆக்சிஜன் பற்றாக் குறை, மரண மண்டலங்களின் எண்ணிக்கை அதிக மாகும்.

மீன் வளத்தில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத் தும். பவளப்பாறைகள் உலகில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே நிலைநிற்கும். பனி மூடியுள்ள ஆர்க்டிக் கண்டத்தில் கோடைக் காலம் 10 மடங்கு அதிகரிக்கும். இந்நூற்றாண்டின் இறு திக்குள் 2.5 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு பனிப்பாறை கள் உருகும். கடல்மட்டம் 10 செமீ உயர்ந்து 10.4 மில்லியன் மக்கள் வெள்ளப்பெருக்கால் மூழ்கும் அபாயத்தில் வாழவேண்டிய நிலை ஏற்படும்.

அரை செல்சியஸ் வெப்ப உயர்வினால் பூமியில் ஏற்படும் அண்டார்டிக்கில் பெரிய பனிப்பாறை உடைந்து உருகுவது போன்ற ஒற்றை நிகழ்வு மூலம் பேரழிவு சம்பவிக்கும். செப்டம்பர் 2021ல் ஐநா வெளியிட்ட அறிக்கையில் பூமி விரைவில் 2.7 டிகிரி சூடாகும் என்று எச்சரித்துள்ளது. காட்டுத்தீயால் எரித்து சாம்பலாக்கப்படும் பரப்பு இருமடங்காக உயரும். ஆர்க்டிக்கில் ஒவ்வொரு ஆண்டும் பனி இல்லாத கோடைகாலம் சம்பவிக்கும்.

கடல்வாழ் உயிரினங்கள் வெப்ப அலை அதிர்ச்சிக்கு 41 மடங்கு அதிகமாக உள்ளாகும். தற்போதைய நிலையை சரி செய்யாமல், புவியின் வெப்பம் நான்கு டிகிரிகள் அதிகரித்தால், அதிதீவிர வெப்பத்தால் உலகில் உயிரிழப்போர் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகரிக்கும். பூமியில் இன்று வாழும் தாவரங்கள், முதுகெலும்பற்ற மூன்றில் இரண்டு பங்கு உயிரினங்களும் தங்கள் வாழ்வி டங்களை இழந்து அழியும். புவிக்கோளின் காடுகள், ஈரநிலங்கள், பிற இயற்கை வளமிக்க இடங்கள் கண்டறியமுடியாத நிலைக்குத் தள்ளப்படும். அப்போது நூற்றாண்டு இறுதியில் உலகக் கடல்க ளில் நீர்மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்து பல பகுதிகளை நீருக்குள் மூழ்கடிக்கும்.

இப்போதில்லையென்றால்…எனவேதான், 13 நாட்கள் நடைபெறுகிற (அக்.31 முதல் நவ.12 வரை) கிளாஸ்கோ மாநாடு, பூமியைக் காக்க நீண்டகாலத்திற்குப் பிறகு நமக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு. காலநிலை மாற்றத்தை பூமிக்கு ஏற்பட்டுள்ள அவசர நிலையாகக் (climate emergency) கருதி தீவிர செயல்களில் ஈடுபடவேண்டும் என்று பசுமை இயக்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளது.

கிளாஸ்கோ மாநாட்டின் முடிவில் பூமியின் வெப்ப உயர்வை 1.5 என்ற அளவில் கட்டுப்படுத்தி நிலைநிறுத்த உறுதியான செயல்களையே ஆட்சியாளர்களிடம் இருந்து உலகம் எதிர்பார்க்கிறது. நிலைமை மோசமாகி வரும் இன்றைய சூழ்நிலையில் கூட இந்தியா, ரஷ்யா, சவூதி அரேபியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளின் முடிவுகளும் உறுதியான செயல்பாடுக ளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

சீனா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் ஆகியவை கரி சுரங்கங்களுக்கு அளிக்கும் நிதி ஆதரவைக் குறைக்க உறுதி பூண்டுள்ளன. இதில் சீனா கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது. முன்பை விட உலக மக்கள் சூழல் சீரழிவு குறித்து கூடுதல் விழிப்புணர்வு பெற்றுள்லனர். ஆட்சியாளர்கள் இனி பல நாள் மக்களை ஏமாற்ற முடியாது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, இந்தியா, சிலி உட்பட பல உலக நாடுகளில் புவி வெப்ப நிலையைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடத் தொடங்கி விட்டனர்.

இதனால் சுயலாபக் கணக்குகளைப் போடுவதை கைவிட்டுவிட்டு அரசியல்வாதிகள் செயலில் இறங்கியே தீரவேண்டிய நிர்பந்தத்திற்கு இன்று ஆளாகியுள்ளனர் உலகத் தலைவர்கள். இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்… நவம்பர் 12 வரை பொறுத்திருந்து காண்போம்.- Theekkathir