மேற்குலகின் “மோசமானதொரு கனவு” நனவாகின்றது

மார்ச் 20ந் திகதியிலிருந்து 22ந் திகதி வரை ரஷ்யாவிற்கு விஜயம் செய்து திரும்பியிருக்கிறார், சீனாவின் ஜனாதிபதி ஸி ஜின்பிங் (Xi Jinping). மார்ச் 10ந் திகதி மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற ஸி ஜின்பிங், தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை ரஷ்யாவிற்கே மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஒருவருடத்தைக் கடந்துள்ள ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள விசேட இராணுவ நடவடிக்கையின் பின்னணியில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது செய்ய உத்தரவிட்ட நிலையில், அமெரிக்காவின் சில வங்கிகள் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில் ஸி ஜின்பிங்கின் ரஷ்ய விஜயம் உலகரங்கில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.