வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 02: இத்தாலியில் மீண்டும் முசோலினி ஆட்சி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நோர்வேஜிய நிகழ்வோடு, முசோலியின் வருகையின் நூற்றாண்டுக்குப் பின்னரும், வலதுசாரி தீவிரவாதம் எவ்வாறு செல்வாக்குள்ள ஒன்றாகத் தொடர்வதைக் கடந்தவாரம் பார்த்தோம்.  இத்தாலியின் தலைநகர் ரோமில், முசோலினி தனது அணிவகுப்பை நிகழ்த்தி ஒரு நூற்றாண்டு கடந்த நிலையில், புதிய பாசிச மற்றும் தீவிர வலதுசாரி சக்திகள் உலகெங்கும் அதிகரித்துள்ளன.