அன்டனி ஜெகநாதனின் ஆசனத்துக்கு நான்குமுனை போட்டி

வட மாகாணசபை உறுப்பினர் அன்டனி ஜெயநாதனின் மறைவால் ஏற்பட்டுள்ள வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் பதவிக்கு, நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. வட மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் நான்கு, இந்தப் போட்டியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புளொட், டெலோ ஆகிய கட்சிகள், அடுத்த பிரதி அவைத்தலைவர் பதவிக்கு தங்கள் கட்சியின் உறுப்பினரை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவரை நியமிக்கக்கூடாது எனவும் இக்கட்சிகள் அழுத்தம் கொடுப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அடுத்த பிரதி அவைத்தலைவர், தமது கட்சி உறுப்பினருக்கு கிடைக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி அவதானம் செலுத்திவருவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாவீடு முடிய முன்பே பதவிக்கு குத்து வெட்டுக்கு தயாராகும் கூட்டமைப்பை மக்கள் வெறுகத் தொடங்கியுள்ளதாக செய்திகள் கசிகின்றன.