தமிழினிக்காய் அழுகிறார்கள்.

(சாகரன்,ரகு கதிரவேலு)

மனித உயிர் மகத்தானது. மனித உயிரை விட சுதந்திரம் மகத்தானது. என்றவர் தமிழினியின் தலைவர். ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் குடித்து தமிழர்களுக்கு இருந்த சுதந்திரத்தையும் இல்லாமல் பண்ணிவிட்டார். மனிதர்களைக் கொன்று மகிழ்ந்தவர்கள் புலிகள். புலிகள் கொன்றபோது மகிழ்ந்தவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள். தமிழினி போன்று எத்தனை பெண்களைக் கொன்றிருப்பார்கள் புலிகள்? செல்வியும்,ராஜினியும், மகேஸ்வரியும், ரேலங்கியும் மற்றும் புலிகளால் கொல்லப்பட்ட தமிழ்பெண்களின் உயிருக்குப் பெறுமதி இல்லையா? பத்மநாபாவும் தோழர்களும் துரத்தி துரத்தி புலிகளால் கொல்லப்பட்டபோது விருந்துண்டு கொண்டாடியவர்கள் தமிழினி உயிருக்காய் அழுது வழிகிறார்கள்.

(“தமிழினிக்காய் அழுகிறார்கள்.” தொடர்ந்து வாசிக்க…)

மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு…..

 

நான் வாழும் ரூஜ்பார்க் ‌தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட நியமனம் கோரிய Gaரி ஆனந்தசங்கரி லிபரல் உட்கட்சித் தேர்தலில் வெற்றியடைந்திருக்கிறார். (இனி 2015இல் வரப்போகும் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் அவர் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும்.) அவரது நியமனத் தேர்தல் நடந்த மண்டபத்திற்குப் போயிருந்தேன். தமிழ்கனடாவின் பெரும்புள்ளிகள் மட்டுமல்ல லிபரல் தமிழ்ப் பொது மக்களும் பெருமளவில் வந்திருந்தார்கள் ஏற்கனவே சூடு பிடித்திருந்த இந்த உட்கட்சித்தேர்தல் கடைசிவரை விறுவிறுப்பாகவே போய் முடிந்தது. Gaரியின் வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் வந்திருந்தவர்களிடையே ஏற்பட்ட ஆரவாரத்தை ரசிக்க முடிந்தது. புதிய அரசியல் உலகம் தெரிகிறது…

(“மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு…..” தொடர்ந்து வாசிக்க…)

கனடா நாட்டில் ராதிகா உட்பட ஐவர் தோல்வி….! ஹரி ஆனந்தசங்கரி வெற்றி…..

கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பலராலும் எதிர்பாக்கப்பட்ட மனிதவுரிமை ஆர்வலருமான ஹரி ஆனந்தசங்கரி ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் அமோக வெற்றியீட்டினார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கண்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த லெஸ்லின் லெவிஸ் இரண்டாவது இடத்தையும், புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சாந்திக்குமார் காந்தரத்தினம் மூன்றாமிடத்தையும் பெற்றனர். ஹரி ஆனந்தசங்கதியின் இராஜாங்க மற்றும் பண்பான அணுகுமுறைகளை அறிந்திருந்த தமிழ்க் கனேடியர்கள் உள்ளிட்ட கனடியர்கள் அவருக்கு பெரிய அளவில் இத் தேர்தலில்வாக்களித்து பல ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெல்ல வைத்தனர்.

(“கனடா நாட்டில் ராதிகா உட்பட ஐவர் தோல்வி….! ஹரி ஆனந்தசங்கரி வெற்றி…..” தொடர்ந்து வாசிக்க…)

மரண வியாபாரிகளின் அறக்கொட்டியான் அரசியல்.

(மாதவன் சஞ்சயன்)

1970 பதுகளில் அறக்கொட்டியான் எனும் பூச்சி பரவலாக நெல் பயிரை தாக்கியது. இந்த பூச்சித் தாக்கத்துக்கு உள்ளான பயிர்களை பார்த்தால் ஏதோ மாடுகள் தான் வயலுள் புகுந்து பயிரை மேய்ந்து விட்டனவோ என எண்ணத் தோன்றும். அந்தளவு தூரம் அதன் தாக்கம் இருக்கும். அந்த தாக்கத்தில் இருந்து தம் விளைந்த பயிர்களை காக்க சிறீமா காலத்தில் பரவலாக செயல்பட்ட, விவசாய விஸ்தரிப்பு நிலையங்களில் மானிய கடன் அடிப்படையில் பூச்சி கொல்லி மருந்தை வாங்கி பாவித்ததால் பயிர்கள் தப்பிப் பிழைத்தன.

(“மரண வியாபாரிகளின் அறக்கொட்டியான் அரசியல்.” தொடர்ந்து வாசிக்க…)

நீதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை – இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் நாள் இரவு 10 மணியளவில் யாழ்ப்பாண நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக அப்போது இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார். அன்று மாலையில், நாகர்கோவிலில் சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட செய்தியை பிபிசி தமிழோசைக்கு தொலைபேசி மூலம் வழங்கி விட்டு, வீரகேசரி நாளிதழுக்காக தொலைநகலில் அனுப்புவதற்காக அந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருந்த போதே, அவரது வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப்படுகொலை செய்தனர்.

(“நீதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை – இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு” தொடர்ந்து வாசிக்க…)

போய் வா போர் மகளே

(ப. தெய்வீகன்)

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியின் மரணச் செய்தி, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் பிணைந்திருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒரு துயரச்செய்தியாக வந்திறங்கியிருக்கிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினராகவும் அரசியல்துறை பொறுப்பாளராகவும் தான் சார்ந்த அமைப்பின் முகங்களில் ஒன்றாகவும் வெளித்தெரிந்த காரணத்தினால் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெரும் கொடூரங்களை அனுபவித்த ஒரு போராளிகளில் ஒருவர் தமிழினி.

(“போய் வா போர் மகளே” தொடர்ந்து வாசிக்க…)

மக்களுக்கான தேர்தலா….? அரசியல்வாதிகளுக்கான தேர்தலா…?

(சாகரன்)

தேர்தல் நாள் இன்று கனடாவில். தற்போதெல்லாம் வெல்லுவதற்கான கோஷங்களை வைத்தே தேர்தலில் தம்மை பிரச்சாரப்படுத்துகின்றனர் அரசியல்வாதிகள்;. கொள்கையின் அடிப்படையில் அல்ல கோஷங்களின் அடிப்படையில் தேர்தலை சந்திக்கின்றனர். இந்தக் கோஷங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் என்ற அடிப்படையில் மட்டும் செயற்படுகின்றனர் அரசியல்வாதிகள். பின்பு செல்வாக்கு செலுத்தும் இந்தக் கோஷங்களை தமது கொள்கைகள் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுகின்றனர். இதில் மக்களுக்கான அங்கத்துவம் என்பதைவிட தமது சுகமான வாழ்விற்கான பாராளுமன்ற அங்கத்துவம் என்பதே முதன்மை பெறுகின்றது. இது இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கும் பொருந்துகின்றது. வெற்றிக்கான கோஷங்களை பரந்துபட்ட மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த பெரு நிதி தேவைப்படுகின்றது. இது அடிப்படையில் நிதியுள்ளவர்களால் மட்டுமே தேர்தலில் நின்று வெற்றிபெறும் நிலமைகள் எற்படுத்தியிருக்கின்றது. சாதாரண சாமான்ய மக்களின் பிரச்சனைகளை அனுபவரீதியாக உணர்ந்தறியும் நிலையில் இந்த வசதிபடைத்த அரசியல்வாதிகள் இல்லாதபோது இவர்கள் சாதாரண மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் பிரதிநிதிகளாக இருக்க முடியாது. எனவேதான் எம்மைப் போன்ற மக்களுக்கு இந்தத் தேர்தலில் யார் வெற்றி… தோல்வி….. ஐ சந்தித்தாலும் நேரடித் தாக்கங்கள் தற்போதெல்லாம் ஏற்படுவதில்லை. இதனால் தற்போது இருக்கும் முதலாளித்துவ பாராளுமன்ற ‘ஜனநாயக’ முறையில் நாம் எமது வாக்குகளை உபயோகிக்க வேண்டும் என்ற வாதங்கள் அடிபட்டே போகின்றது. எனவே மக்களை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய முறமை ஒன்று கண்டேயாகவேண்டும். இதற்கான பொறிமுறையை நாம் கண்டுபிடிக்க தவறினால் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தல் என்ற அடிப்படையில் தமது வாழ்வை மட்டும் உறுதிப்படுத்தும் அரசியல்வாதிக் கூட்டங்கள் பிழைத்துக்கொண்டு போக மறுபுறத்தில் தேர்தல் முறையில் நம்பிக்கையிழந்து தேர்தலில் பங்குபற்றாதவர்களின் தொகை அதிகரித்துக்கொண்டேபோகும்.

பெண் போராளி தமிழினியின் மரணம் போர்க்குற்றத்தின் குறியீடு

தனது இளமைக் காலம் முழுவதும் போராளியாகவே வாழ்க்கையை நகர்த்திய தமிழினி இன்று காலை புற்று நோயால் காலமனார். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழினி கடந்த வாரம் கொழும்பிலுள்ள மகரகம வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் பெண்கள் அணியின் பொறுப்பாளராகச் செயற்பட்ட தமிழினின் 1991 ஆம் ஆண்டில் தனது 19 வது வயதில் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார். பெண்கள் இராணுவப் பயிற்சி, பிரச்சாரம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமிழினி பல இராணுவத் தாக்குதல்களை முன் நின்று நடத்தினார். யுத்தக் குற்றங்களின் நேரடிச் சாட்சிகளில் ஒருவரான தமிழினியின் மரணம் வரலாற்றின் ஒரு பிரதான கட்டத்தின் மரணமாகும்.

(“பெண் போராளி தமிழினியின் மரணம் போர்க்குற்றத்தின் குறியீடு” தொடர்ந்து வாசிக்க…)

என்னமோ சொல்லுறாங்க பொட்டம்மான்….. விநாயகம்….. கோதபாயா…. என்று

காணாமற்போயிருந்ததாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் விநாயகத்தின் குடும்பம் எப்படி யாழ்ப்பாணத்திற்கு வந்தது விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையில் முக்கிய பங்காற்றி வந்தவர் விநாயகம். புலிகள் பலமுற்றிருந்த காலத்தில் தலைமையின் பணிப்பில் கிளிநொச்சியில் இருந்து இயங்கிய இந்த விநாயகம், அப்போது கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு முக்கிய பொறுப்பு வகித்திருந்தார். விடுதலைப்புலிகளால் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நகர்வுகளுக்கான ஆளனிகளுக்கு பயிற்சிகளை வழங்கும் பொறுப்புக்கள் இவருக்கு தலைமையினால் வழங்கப்பட்டிருந்தது.

(“என்னமோ சொல்லுறாங்க பொட்டம்மான்….. விநாயகம்….. கோதபாயா…. என்று” தொடர்ந்து வாசிக்க…)

புலிகளுக்கு பிள்ளையான் வைக்கும் ஆப்பு….?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளையானின் உதவியை நாடியதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

(“புலிகளுக்கு பிள்ளையான் வைக்கும் ஆப்பு….?” தொடர்ந்து வாசிக்க…)