தலைவர் கருணாநிதி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்: ஸ்டாலின் பேட்டி

2ஜி அலைக்கற்றை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டது குறித்து தலைவர் கருணாநிதியிடம் கூறியதும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 2ஜி அலைக்கற்றை வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்துசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

(“தலைவர் கருணாநிதி கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்: ஸ்டாலின் பேட்டி” தொடர்ந்து வாசிக்க…)

ராகுலுக்குக் கிடைத்தது வெற்றியா, தோல்வியா?

இந்திய அரசியலைப் பொறுத்தவரை, அண்மைய சில வாரங்கள், மிக முக்கியமானவையாக அமைந்துள்ளன. இன்றைய தினம் (21), தமிழகத்தின் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் இடம்பெறவிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர், குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றின் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருந்தன. ஆர்.கே நகரைப் பொறுத்தவரை, தேசிய அரசியலில் பெரிதாகச் செல்வாக்குச் செலுத்தாத ஒரு தொகுதியாக இருக்கிறது. அதற்குப் பிரதானமான காரணமாக, மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு, தமிழகத்தில் எப்போதும் வரவேற்பு இருந்ததில்லை என்ற அடிப்படையில், இத்தேர்தலிலும் அக்கட்சி தோல்வியடையும் என்பதில் மாற்றுக் கருத்துகளே இல்லை. (“ராகுலுக்குக் கிடைத்தது வெற்றியா, தோல்வியா?” தொடர்ந்து வாசிக்க…)

இம்முறையும் தப்பிப் பிழைப்பாரா விமல்?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இது தேர்தல் காலம். இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்காகப் பலமாக ஒலிக்க வேண்டிய ஒரு குரல், மௌனித்து இருப்பது முக்கியமானதொரு விடயமாகத் தெரிகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர், சில காலமாக அடங்கிக் கிடந்த மஹிந்வை, உசுப்பேற்றி, மீண்டும் களத்துக்கு இழுப்பதில் சூத்திரதாரியான தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, தமது குருவும் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ, முக்கியமான தேர்தலுக்கு முகம் கொடுக்கத் தயாராகி வரும் நிலையில், அசாதாரணமாக மௌனம் காக்கிறார்;அல்லது குரலைத் தாழ்த்திப் பேசுகிறார்.

(“இம்முறையும் தப்பிப் பிழைப்பாரா விமல்?” தொடர்ந்து வாசிக்க…)

எமது 2017 மேதினப் பிரசுரம்

(உள்ளாட்சி அதிகாரத்தினூடாக செய்யப்பட வேண்டிய காரியங்களும் இதில் இடம் பெறுகின்றன. காலப் பொருத்தம் கருதி இங்கு பதிவிடப்படுகிறது)

மக்கள் சார் சீர்திருத்தங்களை துரிதப்படுத்தப்பட வேண்டும்.
2017 மேதின பிரகடனம்
உலகத்தொழிலாள வர்க்கம் மிகப்பெரும் சவால்களை எதிர் நோக்கி நிற்கும் தருணத்தில் நாம் மேதின நிகழ்வை நினைவு கூருகிறோம்.
உலகத்தை அச்சுறுத்தும் யுத்த அபாயம் சூழ்ந்துள்ள நிலையில் அடிப்படைவாத – தேசியவாத அலை உத்வேகம் பெற்றுள்ள நிலை. மாத்திரம் அல்ல.

(“எமது 2017 மேதினப் பிரசுரம்” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளுராட்சி தேர்தல்கள் பற்றி சிறீதரன் திருநாவுக்கரசு

இம்முறை உள்ளூராட்சி சபைகளில் 25 வீதத்திற்கு குறையாமல் பெண்கள் இடம்பெறவேண்டும். சிறிய கட்சிகள் பலமற்ற குரல்களுக்கும் ஓரளவு சாதகமான நிலை காணப்படுகிறது. ஆனால் பெருந்தொகையான பிரதிநிதித்துவம் துக்ளக்கின் தர்பாரை விஞ்சிய அராயகத்திற்கும் வழி வகுக்கலாம். கிராமிய வட்டார மட்ட ஊழல் விஸ்தரிப்பு வாதம் ஆகி விடக்கூடாது. மக்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதில் கட்சி செயலாளருக்குள்ள அதிகாரம் . கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தல1500 ரூபா கட்டுப்பணம் சுயேச்சையாக கேட்பவர்களுக்கு தலா 5000 ரூபா என்பதும் பணம் படைத்த கட்சிகள் தான் எல்லா இடங்களிலும் தேர்தலில் பங்கு பற்றலாம் என்ற நிலை இவை எல்லாம் ஜனநாயக விழுமியங்கள் மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. ஏகப்பட்ட நிறை குறைகள். தேர்தல் தேர்தலுக்கு பிந்திய நடைமுறைகள் இது ஒரு பரிசோதனை காலம்.
சாதாரண மக்களுக்கு குரலற்றவர்களுக்கான அதிகாரம் என்பதே முக்கியமானது

1986 மார்கழி 13.

தனிநபர் தலைமைக்குப் பதிலாக கூட்டுத்தலைமை, இயக்கத்திற்குள் ஜனநாயகம், விமர்சனம், சுயவிமர்சனம் மூலம் பிணக்குகளுக்குத் தீர்வு காணுதல், சகோதரப் படுகொலைகளுக்கு எதிர்ப்பு, இயக்கங்கள் மத்தியில் ஒற்றுமை, இனங்களுக்கிடையே ஐக்கியம், அமைப்புக்களுக்கும்,; தனி நபர்களுக்கும் ; பேசவும் எழுதவும்; ஒன்று கூடவும்; உள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை பேணுதல், மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்தல், இயக்கங்களின் தவறான போக்குகளை விமர்சிக்கும் மக்களின் உரிமையை மதித்தல் என்பவற்றை வலியுறுத்தியும், நடைமுறைப்படுத்தியும் வந்ததுடன் சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைப் பேசிய, உழைக்கும் மக்களின், பெண்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த பாட்டாளிவர்க்கத் தலைமையை கட்டியெழுப்ப முயன்ற ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் சுயாதீனமான செயற்பாட்டுக்கு 13.12.1986 அன்று புலிகள் தடை விதித்தனர். (“1986 மார்கழி 13.” தொடர்ந்து வாசிக்க…)

மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றம் : ஒரு தசாப்த அவல வரலாறு

நினையாப் பிர­கா­ர­மாக புலி­களால் இராப் பொழுதில் ஒலி­பெ­ருக்கி மூலம் வெளி­யேறச் சொல்லி கால் நடை­யாக சுமார் 60 கிலோ­மீற்றர் தூரம் வெயிலில் விரட்­டப்­பட்ட மூதூர் மற்றும் தோப்பூர் முஸ்­லிம்­களின் வர­லாறு இப்­பொ­ழுது ஒரு தசாப்­தத்தை (10 வரு­டங்­களை) நிறைவு செய்­தி­ருக்­கின்­றது.

(“மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றம் : ஒரு தசாப்த அவல வரலாறு” தொடர்ந்து வாசிக்க…)

பச்சைத் தங்கத்துக்கு சர்வதேசத்தின் அடி

(ஆர்.மகேஸ்வரி)

நூற்றைம்பது ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இலங்கையின் தேயிலைத் தொழிற்றுறையானது, சர்வதேசத்தில் தனக்கென முத்திரையைப் பதித்துள்ளது. தேயிலையினால் தயாரிக்கப்படும் தேநீர் என்பது இலங்கையர்களின் தேசிய பானம் என்று கூறுமளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றித்துவிட்ட ஒன்றாகும். தேநீரின் சுவையைச் சுவைக்காத இலங்கையர்கள் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் இல்லை என்றே சொல்லுமளவுக்கு தேநீர் ஓர் உற்சாக பானம் என்று கூறுவதில் தவறில்லை.

(“பச்சைத் தங்கத்துக்கு சர்வதேசத்தின் அடி” தொடர்ந்து வாசிக்க…)

வட்டமடு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வட்டமடு விவசாயிகள் முன்னெடுத்து வந்த கவனயீர்ப்புப் போராட்டம், இன்று (20) தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக, வட்டமடு கமக்காரர் அமைப்பின் தலைவர் எம்.ஐ. அப்துல் றஸீட் தெரிவித்தார்.

(“வட்டமடு விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்” தொடர்ந்து வாசிக்க…)

இது பாஜக பெற்ற வெற்றி அல்ல… தோல்வி: ஜிக்னேஷ் மேவானி

ஜிக்னேஷ் மேவானி. குஜராத்தில் கடந்த 22 ஆண்டு கால வரலாற்றை மாற்றி எழுத முற்பட்ட 3 இளைஞர்களில் ஒருவர். தற்போது குஜராத் தேர்தலில் பாஜக கடும் பின்னடைவைச் சந்திக்கக் காரணமாக இருந்தவரும்கூட. இந்தத் தேர்தலில் பாஜக-வை எதிர்த்து வட்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர், சுமார் 18,150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்து மழையில் நனைந்துக்கொண்டிருந்தவரிடம் ‘தி இந்து’-வுக்காக பேசினோம்.

(“இது பாஜக பெற்ற வெற்றி அல்ல… தோல்வி: ஜிக்னேஷ் மேவானி” தொடர்ந்து வாசிக்க…)