ஆபிரிக்காவின் இரு மரணங்கள்: வரலாறு எவ்வாறு நினைவுகூரும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

வரலாறு எல்லோரையும் நினைவில் வைத்திருப்பதில்லை. அவ்வாறு நினைவில் இருப்பவர்களும் எதற்காக நினைவிலுள்ளார்கள் என்பதிலேயே, அவர்களின் சமூகப் பெறுமானம் உள்ளது. வரலாற்றில் இடம்பெற்றோர் எல்லோரும் நினைக்கப்படுவதுமில்லை. வரலாறு ஒருவரை எதற்காக, எவ்வாறு நினைவில் வைக்கிறது என்பதே, இருப்பின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. நினைப்பதும் மறப்பதும் காலத்தின் வழுவல. நினையாமல் இருப்பதும், மறவாமல் நினைப்பதும், அவரவர் வாழ்ந்த காலத்தைக் கூறும் உரைகற்கள்.

(“ஆபிரிக்காவின் இரு மரணங்கள்: வரலாறு எவ்வாறு நினைவுகூரும்” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்ப்புக்கு வருகிறது மிகப்பெரும் ஆபத்து?

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முன்னாள் சட்டத்தரணி மைக்கல் கோஹன், தன்மீதான குற்றச்சாட்டுகளை ஏற்று, நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில், ஜனாதிபதியை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் தகவல்களை அவர் வெளியிடுவாரென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோஹனின் சட்டத்தரணியான டனி டேவிஸ், இது தொடர்பான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

(“ட்ரம்ப்புக்கு வருகிறது மிகப்பெரும் ஆபத்து?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 03)

(Thiruchchelvam Kathiravelippillai)

தமிழீழ விடுதலைப்புலிகளின் தம்பலகமம் பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்த குரு மற்றும் அவருடன் உடன் களப்பணியாற்றிக் கொண்டிருந்த உதயன் ஆகியோர் கிண்ணியாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஹும் அப்துள் மஜீத் அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட புகாரியில் கலந்துகொள்வதற்காக தம்பலகமத்திலிருந்து புறப்பட்டார்கள். தமிழ் பேசும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த வாய்ப்பினை எதிர்பார்த்திருந்த அரச புலனாய்வாளர்களுக்கு குறிப்பாக மொசாட் வழிகாட்டலில் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இச்செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டும். சந்தர்ப்த்தை தவறாது பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். அதற்கான காய்நகர்த்தல்களை எதுவித பிசிகுமின்றி செய்வதற்கு தம்மால் பயிற்றப்பட்டவர்களை ஏற்கனவே பொதுமக்களுடன் வாழ்வதற்கு அனுப்பியிருந்தது அரச இயந்திர புலனாய்வு.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 03)” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பொதுவான கொள்கை மற்றும் வேலைத்திட்டத்திற்கு சகல தரப்புக்கும் திறந்த அழைப்பு

சம்பள உயர்வு உட்பட பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான புதிய கூட்டு ஒப்பந்தம் உட்பட பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் பெருந்தோட்டத் தொழிற்துறையையும் பாதுகாப்பது தொடர்பான பொவான கொள்கை மற்றும் வேலைத்திட்டத்திற்கான கலந்துரையாடலுக்கு சகல தொழிற்சங்கங்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், சிவில் அமைப்புகளுக்கும், தனி நபர்களுக்கும் மக்கள் தொழிலாளர் சங்கம் திறந்த அழைப்பை விடுத்துள்ளது.

(“கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பொதுவான கொள்கை மற்றும் வேலைத்திட்டத்திற்கு சகல தரப்புக்கும் திறந்த அழைப்பு” தொடர்ந்து வாசிக்க…)

தூண்டில் இரைகள்

(கே.எல்.ரி.யுதாஜித்)

இன்னமும் நாம் ஒற்றுமைப்படவில்லை; வாய்ப்பேச்சிலும் சரி, செயற்பாடுகளிலும் சரி நமக்குள் அடிக்கடி அடிபுடிகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. எம்மை நம்பி வாக்களித்த மக்கள் எப்போக்கில் போனாலும் சரி, எக்கேடு கெட்டாலும் சரி, நாங்கள் அடுத்துவரும் தேர்தலைப் பற்றியே சிந்திப்போம் என்பதுதான், பெருமளவான அரசியல்வாதிகளின் மனஓட்டமாக இருக்கிறது.

(“தூண்டில் இரைகள்” தொடர்ந்து வாசிக்க…)

அன்பின் சூத்திரம் ஆசிரியருக்கு!

கலைஞர் தொடர்பாக ராம் எழுதி நீங்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில் நான் வடக்கு கிழக்கு மாகாண சபை காலத்தில் எங்களுக்கு நெருக்கடிகள் ஏற்பட்ட பின்னர் கடைசி நேரத்தில்த்தான் அவரை நாடியது போன்று அர்த்தம் தொனிக்கும் வகையில் எழுதப் பட்டிருக்கின்றது. அது மிகத் தவறானது. அதனைத் திருத்தும் வகையில் நான் கீழே குறிப்பிட்டுள்ளதை பதிப்பிப்பதுடன், அதனை எழுதிய ராமுக்கும் இந்தத் தகவலை அறியத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

(“அன்பின் சூத்திரம் ஆசிரியருக்கு!” தொடர்ந்து வாசிக்க…)

500 ஏக்கரை விடுவிக்க ரூ.780 மில்லியன் ஒதுக்கீடு

வடக்கு, கிழக்கில், பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில், மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு, அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளதென, அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது என்றும், திறைசேரித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(“500 ஏக்கரை விடுவிக்க ரூ.780 மில்லியன் ஒதுக்கீடு” தொடர்ந்து வாசிக்க…)

வாஜ்பாய் மறைவு: பன்முகத்தன்மை வாய்ந்த தலைவரின் இழப்பு

(எம். காசிநாதன்)
அடல் பிஹாரி வாஜ்பாய், 1957இல் இருந்து, பத்துமுறை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்; இரண்டு முறை மாநிலங்களவைக்குத் தெரிவானார். வெளியுறவுத்துறை அமைச்சராகவும் மூன்று முறை இந்தியாவின் பிரதமராகவும் இருந்தவர். இவரின் மறைவால், ‘சிறந்த நாடாளுமன்ற வாதி’ ஒருவரை, இந்திய ஜனநாயகம் பறிகொடுத்திருக்கிறது.

(“வாஜ்பாய் மறைவு: பன்முகத்தன்மை வாய்ந்த தலைவரின் இழப்பு” தொடர்ந்து வாசிக்க…)

காரணம்தான் என்ன? கேரளாவில் வரலாறு காணாத பேய்மழை, வெள்ளம் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?

கேரளாவில் நூறு ஆண்டுகளில் இல்லாத பேய் மழை பெய்து வருகிறது, மழை இன்னமும் கூட ஒய்ந்தபாடில்லை எனும் நிலையில் ஞாயிறு முதல் மழைக் குறையலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை, வெள்ளத்துக்கு இதுவரை 324 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வெள்ளப்பகுதிகளைப் பார்வையிட்டு முதற்கட்டமாக ரூ.500 கோடி நிவாரணம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

(“காரணம்தான் என்ன? கேரளாவில் வரலாறு காணாத பேய்மழை, வெள்ளம் குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?” தொடர்ந்து வாசிக்க…)