தூபி அமைக்கும் பணி ஆரம்பம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புரைக்கமைய, பொறியியல் வேலை பகுதியினரால் அளவீடுகள் மற்றும் கட்டட வரைபடம் வரையும் பணி, நேற்று (13) முன்னெடுக்கப்பட்டன.

தை பிறந்தால் வழி பிறக்கும்…. தைத் திருநாள்…அறுவடை நாள் வாழ்த்துகள்

(சாகரன்)

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற எல்லோருக்கும் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்தி முன்னேறுவதற்குரிய கொண்டாட்டத்திற்குரிய அறுவடையை கொண்டாடும் நாள். அறுவடையை வைத்தே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. எனது அனைத்து தோழமைகளுக்கும், சகாக்களுக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என் தைத் திருநாள், உழவர் திருநாள் வாழ்த்துகள்.

ஜல்லிக்கட்டை ரசித்தார் ராகுல் காந்தி

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருவதுவழக்கம். அதில், முதல் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் தேச ஐ. அமெரிக்க பட்டியலில் கியூபா

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் தேசங்களின் ஐக்கிய அமெரிக்க பட்டியலில் கியூபாவை இணைத்துள்ளதாக ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகமானது நேற்று அறிவித்துள்ளது.

நினைவுத்தூபி அழிப்பு: அறத்தின் மீதான ஆக்கிரமிப்பு

(புருஜோத்தமன் தங்கமயில்)

போர் வெற்றி வாதத்துக்கு எதிராக முளைக்கும் சிறிய புல்லைக்கூட, விட்டு வைத்துவிடக் கூடாது என்பது ராஜபக்‌ஷர்களின் ஒரே நிலைப்பாடு. அதுபோல, பௌத்த சிங்கள மேலாதிக்க மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கும் எந்தவோர் அம்சத்தையும், நாட்டின் எந்தப் பாகத்திலும் அனுமதித்துவிடக் கூடாது என்பது, தென் இலங்கையின் குறிக்கோள்.

ஜெய்ஷங்கரின் உரை மிரட்டலா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்ஷங்கரின் இலங்கை விஜயம், தமிழ் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் எதிர்பார்ப்பை அளித்துள்ளதாகத் தெரிகிறது. இலங்கை வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் வௌியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், கடந்த ஆறாம் திகதி கொழும்பில் நடத்திய கூட்டு ஊடகவியலாளர் மாநாட்டின் போது, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்குவது தொடர்பாக, மீண்டும் வலியுறுத்தியமையே அதற்குக் காரணமாகும்.

கரும்பு உண்டிருக்கும் நாம் காணும் பொங்கலில் ‘காணாது விடுவோம்’

தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான விழா தைப்பொங்கலாகும். உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதும் சூரியனுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் சொல்லும் நன்றியறிதலாகவே இது கொண்டாடப்படுகின்றது.

சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

மட்டக்களப்பு – களுவாஞ்சிடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் சுதாகரன் அஸ்வினி என்ற 11 வயதுச் சிறுமியின் மரணம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தக்கோரியும் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தியும், பெரியகல்லாறு பிரதான வீதியில் நேற்று (13) மாலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் மேலும் 3 தொற்றாளர்கள்

வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு, இன்றையதினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா – பட்டாணிசூர் பகுதியில், கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், வவுனியாநகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

’கொரோனா’ சமூகத்தில் வியாபிக்கவில்லை

கொரோனா வைரஸ் பரவலானது இன்னும் சமூகத்தில் அதிகம் வியாபிக்கவில்லை என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு அமைய, 3.5 தொடக்கம் 4 சதவீதமானோரே தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.