அமெரிக்காவில் மனித உரிமை மீறல் பற்றி பேசுவோம்: ஜெய்சங்கர் பதிலடி

இந்தியாவில் மனித உரிமை மீறல் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்காவிற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பிரச்னை ஏற்பட்டால் அது பற்றி கருத்து தெரிவிப்போம். நேற்று கூட இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதாக கூறியுள்ளார்.

இலங்கைக்கு மேலும் ரூ.15,200 கோடி நிதி வழங்க இந்தியா முடிவு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. அத்தியாவசிய பொருட்கள், மருந்து உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்து வருவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

இளையராஜா

கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும், “பெரியார்” படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று கண்டிப்பாக அன்று இளையராஜா சொல்லிவிட்டதாக செய்திகள் பரபரத்தன..!

ராகுல் காந்தி : இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 5 லட்சம் பேர் அல்ல. 40 லட்சம் பேர்

நீங்களும் உண்மையை பேச மாட்டீங்க..” கொரோனா மரணங்களை மூடி மறைத்த மோடி அரசு.. அம்பலப்படுத்திய ராகுல்காந்தி! பிரதமர் மோடி உண்மையை சொல்லவும் மாட்டார். மற்றவர்கள் அதனை சொல்ல அனுமதிக்கவும் மாட்டார் என ராகுல் காந்தி சாடியுள்ளார்.

அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், தற்போது அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்படுகின்றது. இதில், 17 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவிப்பிரமானம் செய்துகொண்டுள்ளனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் நஷீர் அஹமட் சுற்றாடல் துறை அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மக்களின் கருத்துகளுக்கு செவி சாய்க்க வேண்டும்

மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காமை பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே சகல கட்சிகள் மற்றும் அமைப்புகளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டே தேர்தல் ஆணைக்குழு குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.

முந்தினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை தொடர்பான அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பான பிரேரணையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளார் என பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

“சலுகைகளை எதிர்பார்க்க வேண்டாம்” ஜனாதிபதி

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களிடம் அமைச்சரவை சலுகைகளை எதிர்பார்க்காமல் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

ஷோக்கா சொன்னபா மெட்ராஸ் பாஷை ஒரு பார்வை…..‌

இன்னாபா… ஷோக்கா கீறியா?… நாஸ்டா துன்னுக்கினியா? என்று யாராவது விசாரித்தால் மெர்சலாகிவிடாதீர்கள்.. அதாவது மிரண்டு விடாதீர்கள். அக்மார்க் மெட்ராஸ்வாசிகளின் அன்பின் வெளிப்பாடாக கரைபுரண்டு வரும் வார்த்தை வெள்ளத்தின் நட்புத்துளிகள்தான் அவை. மூன்றரை நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட மெட்ராஸ் மாநகரின் அடையாளங்களில் மிகவும் முக்கியமானது இந்த மெட்ராஸ் பாஷை.