துஷ்பிரயோகம் செய்த மாணவர்களுக்கு வலை

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

பாடசாலைகளுக்கு ஒரு வாரம் பூட்டு

நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் அனைத்து மாகாணங்களிலும் உள்ள நகர பாடசாலைகள், ஜூன் 27 முதல் ஜூலை 1 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 399 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 399 பேர் இலங்கை பொலிஸார் மற்றும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

எரிபொருள் விலைகள் அதிகரித்தன

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்  இன்று (26) அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது. அதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், புதிய விலை 470 ரூபாயாகும். 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 100 ரூபாயினால் அதிகரித்து, புதிய விலை 550 ரூபாயாகும்.

இலங்கைக்கு அமெரிக்க உயர்மட்ட குழு விஜயம்

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது. இந்த குழு ஜூன் 26 முதல் 29 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் போராட்டம் வெல்லட்டும்

உறவுகளே கீழுள்ள இணைப்பை சொடுக்கி தங்கள் ஆதரவை தெரிவியுங்கள். முக்கியமான அரசியல் கோரிக்கையிற்கான போராட்டம் இது

https://forms.gle/vqp3Np16cGEGZhFh6

நீண்ட காத்திருப்பு: சீரழியும் நாட்டின் கதை

(புருஜோத்தமன் தங்கமயில்)

எரிபொருளை ஏற்றி வந்த வாகனத்தை தேங்காய் உடைத்து வரவேற்ற காட்சியொன்று வடமராட்சிப் பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் பதிவானது. அதுபோல, எரிபொருள் தாங்கி வாகனத்தில் இருந்து, சட்டத்துக்கு புறம்பாக வைத்தியர் ஒருவர், வெற்றுக் கான்களில் பெற்றோலை பெற்று, தன்னுடைய வாகனத்தில் எடுத்துச் செல்லும் காட்சியும் ஊடகங்களில் செய்தியானது.

நீதி பலவாயின் நாட்டை நிமிர்ந்தெழச் செய்வது கடினமாகும்

நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் எதற்கு, அதைச் சாப்பிடமுடியுமா எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர் என, பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ, ஸ்திரமான ஆட்சியொன்று இருக்கிறதா, ஜனநாயகம் பேணப்படுகிறதா? என சர்வதேசமும் சர்வதேச நிறுவனங்களும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர் என பதிலளித்தார்.

தூத்துக்குடியில் இருந்து கோடி மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு

இலங்கை மக்களுக்கு   தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம்  மேலும் ஒரு தொகுதி அத்தியாவசிய பொருட்கள் நேற்று  (22) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.