ஜனாதிபதியுடன் அமெரிக்க தூதுக்குழு சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இலங்கையின் வடபகுதியை இந்தியாவிற்கு விற்க முயற்சி?

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில், வடபகுதியை  இந்திய அரசிற்கு விற்கப் போவதாக மன்னார் மாவட்ட மீனவ சங்கத் தலைவர் மொகமட் ஆலம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பின்போதே இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெளிநாட்டு நாணங்கள் உங்களிடம் இருக்கின்றதா?

வெளிநாட்டு நாணயங்களை வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

’எந்த நாடும் தப்ப முடியாது’

உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என்றும் அதன் பின்விளைவுகளில் இருந்து எந்த நாடும் தப்ப முடியாது என்றும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனித உரிமைப் போராளி தீஸ்தா செதல்வாட் விடுதலைக்கு குரல்கொடுப்போம்!

முஸ்லீம்களுக்கு எதிரான குஜராத் கலவரம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாட்டை அம்மாநில பயங்கரவாத தடுப்பு படையினர் கைது செய்துள்ளனர். குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று தள்ளுபடியான நிலையில் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி அரச வைத்தியசாலையில் இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் தமிழகம் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள  சிறப்பு முகாமில், தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற 30 இலங்கைத் தமிழர்கள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கூடங்குளம் அணு மின்நிலைய ஆதரவை விரிவுபடுத்தும் ரஷ்யா

புவிசார் அரசியல் அபிவிருத்தியுடன் தொடர்புடைய சவால்கள் இருந்தாலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணு உலைகளுக்கு ரஷ்யா தொடர்ந்தும் ஆதரவு வழங்கி வருகிறது. அதன்படி, அணு மின்னிலையத்தின் அணு உலை 5க்கான வெப்பப் பரிமாற்றக் கருவியை ரஷ்யா தயாரித்துள்ளதாகவும் இந்தியாவுக்கு அனுப்புவதற்காக நிவாரணத் தொட்டி தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை வந்தனர்

அமெரிக்க திறைசேரி திணைக்களம் மற்றும் இராஜாங்க திணைக்களம் ஆகியவற்றின் உயர்மட்ட தூதுக்குழுவினர், இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர். இந்த தூதுக்குழுவினர் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கிருக்கவுள்ளனர். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றின் மூலம் இதை தெரிவித்துள்ளது.

சிவில் யுத்தமொன்றுக்கான அச்சம்; மேகம் கருக்கட்டுகிறது

நிவாரணங்களில் முறைக்கேடுகள், எரிபொருள் விநியோகத்தில் முறைமையின்மை, பதுக்கல்கள், அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு எரிபொருள் வழங்கலில் முன்னுரிமை, பாதுகாப்பு கடமையிலிருக்கும் பொலிஸ், இராணுவ அதிகாரிகளுக்கு இடையே கைகலப்பு என வெறுக்கத்தக்கதும் வேண்டத்தகாததுமான  செய்திகளே, செவிகளை நிரப்புகின்றன; இவை அபத்தமானவை.

சாப்பாட்டு பார்சலின் விலையும் அதிகரிப்பு

சாப்பாட்டு பார்சல் மற்றும் அனைத்து உணவு வகைகளின் விலைகளும் 10 சதவீதத்தினால் அதிகரிக்கும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.