அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 70 சதவீதமாக உயரும்

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைகளில் அடுத்த சில மாதங்களில்  அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள விலை உயர்வுகளுடன் நாட்டின்  முதன்மைப் பணவீக்கமானது 70 சதவீதமளவு உயர்வடையும் எனவும், குறைந்த வருமானங்களை பெரும் மக்களே  அதிகமாக பாதிக்கப்படப்போகின்றனர் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய மாநிலங்களவை உறுப்பினரானார் இளையராஜா

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்.பி.யாக அறிவிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு, சமூக சேவை,கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவைக்கு 12 பேரை நியமன எம்.பி.க்களாக இந்திய ஜனாதிபதி நியமிக்கலாம்.

அமைச்சர் நிமல் பதவியைத் துறந்தார்

விமான சேவைகள் அமைச்சுக்கும் தனியார் நிறுவனமொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியின் உத்தரவு பிறப்பிடத்துள்ளார்.

ஹிருணிகா கைது செய்யப்பட்டுள்ளார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக உள்ள படலைக்கு முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர சில நிமிடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது பொலிஸ் பேருந்தில் ஏற்றி அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்

நான் ரெடி: ரணிலுக்கு அனுர பதில்

தற்போதைய நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்துக்குள் நாட்டி மீட்டெடுப்பதற்கும் நாட்டை ஸ்திரப்படுத்தவும்  தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை குறுகிய காலத்தில் தீர்த்து வைப்பதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

புகையற்ற அடுப்பு கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவில் கடமையாற்றும் தவராசா சுரேஷ் எனும் உத்தியோகத்தர் புகையற்ற புதிய வகை அடுப்பினை கண்டுபிடித்துள்ளதுடன், குறித்த அடுப்பினை நேற்றைய தினம் மாவட்ட செயலகத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இராஜினாமா செய்யுங்கள்: பேராயர் கோரிக்கை

ராஜபக்ஷ குடும்பம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பது, தற்போதைய துரதிஷ்டமான சூழ்நிலையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு மிகப் பெரிய தடையாக உள்ளதாக கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இராஜினாமா செய்ய தயார் : ரணில்

ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமாரவின் வேலைத்திட்டம் வெற்றியளிக்குமாயின் அவரை பிரதமராக நியமிக்கவும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவியில் இருந்து நான் இராஜினாமா செய்வேன். அமைச்சர்களும் இராஜினாமா செய்வார்கள் என்றார்.

நோயைக் குணப்படுத்துவதா? அறிகுறியை மறைப்பதா?

(என்.கே. அஷோக்பரன்)

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகத்தர் குழாமொன்று ஜூன் 20 முதல் 30 வரை, பத்து நாள்கள், இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் இலங்கைக்கான விரிவான பொருளாதார சீர்திருத்த திட்டம் ஆகியன பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமரும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் கே.எம். மஹிந்த சிறிவர்தன, அரசாங்க மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தனியார் துறை பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகள், சர்வதேச நாணய நிதியத்தின் அபிவிருத்தி பங்காளிகள் ஆகியோரைச் சந்தித்து, பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டுத் திரும்பி இருக்கிறார்கள்.

அடுத்த வாரம் மூடப்படுகிறது நாடு?

அரசாங்கம் அதிகாரபூர்வமாக தீர்மானம் செய்யாவிட்டாலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக அடுத்த வாரம் நாடு மூடப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் நெருக்கடியால் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு நாட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.