ரணிலை விமர்சித்த இருவரின் ஆசனங்கள மாறின

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கடந்தக் காலங்களில் கடுமையாக விமர்சித்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்களான தம்மிக்கப் பெரேராவும், ஜனாதிபதி வாக்கெடுப்பின்போது ரணிலுக்கு எதிராகச் செயற்பட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிக்கும் பாராளுமன்றத்தில் ஆசனங்கள் மாற்றப்பட்டுள்ளன.

திருகோணமலையில் நினைவஞ்சலி

திருகோணமலையில் உள்ள வெலிக்கடைத் தியாகிகள் நினைவு அரங்கில்  நினைவஞ்சலி நிகழ்வு, நாளை புதன்கிழமை  (27) மாலை 5.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. 1983ஆம் ஆண்டு, ஜூலை 25, 27ஆம் திகதிகளில்  வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் உட்பட 53 வீர மறவர்களினது  நினைவாக அமைக்கப்பட்ட இந்த தியாகிகள் அரங்கில் நினைவஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வழமைக்கு திரும்பிய பேருந்து சேவைகள்

யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை பணியாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ். மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் இன்று முதல் 50 வீதமளவில் இயங்குமென யாழ். மாவட்ட பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பேருந்து நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதாரன் தெரிவித்துள்ளார்.

விமானத்தில் வைத்து போராட்டக்காரர் கைது

விமானம் ஊடாக டுபாய் நோக்கிப் பயணிக்க தயாராக இருந்த காலி முகத்திடல் போராட்டக்காரர்களில் ஒருவர் சி.ஐ.டியினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். 

உன்னால் முடியும் தம்பி… தம்பி…..


(சாகரன்)

‘நாட்டிற்குள் வந்தது யானை
அடுப்பிற்குள் புகுந்தது பூனை’
என்ற தோழர் மு. கார்த்திகேசனின் வாசகங்கள் என் நினைவில் வந்து போகின்றது……

ஜனாதிபதியான பழங்குடியின பெண் திரௌபதி முர்மு

இலங்கையின் ஜனாதிபதி பதவி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விமா்சனங்களையும், அதிருப்திகளையும், சா்ச்சைகளையும், கொந்தளிப்புகளையும் உருவாக்கியிருக்கின்ற நிலையில் எமது அயல் நாடான இந்தியாவில், ஜனாதிபதி பதவி ஒரு பேசு பொருளாகியுள்ளது.

’ஆயுதமேந்தும் நோக்கமில்லை’

போராட்டக்காரர்களுக்கு ஆயுதமேந்துவதற்கான எந்தவிதமான நோக்கங்களும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் பதற்றம்

காலி முகத்திடலில் சற்று பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பண்டாரநாயக்க சிலைக்கு அருகில் குழுமியிருந்தவர்களை கைது செய்வதற்கு முயன்ற போதே பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த போராட்டக்காரர்களில் நால்வரையே பொலிஸார் கைது செய்வதற்கு முயற்சித்துள்ளனர். அதன்பின்னரே, ஏனைய போராட்டக்காரர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளனர்.

TNA: Cash Deal with UNP

Deals were stuck at the UNP chairman’s house. Mr Vajira Abeywardena’s house saw several members of parliament being in and out. Figures offered range between 25,000,000 and 40,000,000 LKR (US$ 75,000 to US$ 100,000). The veterans and senior members – the torch bearers were promised between USD 75K and USD 100K equivalent in Rupees. Others were offered LKR 20m which was haggled up by most MPs to 25m.

ஜனாதிபதி தெரிவும் தமிழ்க் கட்சிகளும்

(என்.கே. அஷோக்பரன்)

இலங்கையினுடைய எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக, அரசியலமைப்பின் 40ஆவது சரத்தின்படி, பாராளுமன்ற உறுப்பினர்களிடையேயான இரகசிய வாக்கெடுப்பின் மூலம், ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டு, பதவியேற்றிருக்கிறார். பல திருப்புமுனைகளோடு, மிக விறுவிறுப்பாக இந்த ஜனாதிபதி தெரிவு அரங்கேறியிருக்கிறது.