விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் மக்கள் வழங்கிய ஆணை தற்போது இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் பொதுத் தேர்தலை நடத்தி, புதிய மக்கள் ஆணைக்கு செல்ல வழியமைக்க  வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து வந்தவர்களுக்கு மொனராகலையில் வரவேற்பு

வரலாற்றுப் புகழ்மிக்க கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக வடக்கிலிருந்து பாதயாத்திரையாக வந்த யாத்திரிகர்கள்,  மொனராகலையில் வைத்து வரவேற்கப்பட்டனர்.

புதிய ஜனாதிபதியையும் மக்கள் வீட்டுக்கு துரத்துவர்

ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ரணில் வீடு செல்ல வேண்டும் என்பதே மக்களின் தற்போதைய கோரிக்கை என தெரிவித்த அவர், எனவே மக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்றார்.

100 நாட்களைக் கடந்த போராட்ட களம் அகற்றப்பட்டது

கண்டி- ஜோர்ஜ் ஈ.த. சில்வா மாவத்தையில் அமைக்கப்பட்டிருந்த 100 நாட்களைக் கடந்த கோட்டா கோ கம பேராட்டக் களமானது, அகற்றப்பட்டுள்ளது. குறித்த போராட்டக் களத்தை உருவாக்கியவர்களே அதனை அகற்றியுள்ளனர்.

போராட்டக்காரர்களை அகற்றியமை தொடர்பில் விவாதம்

காலி முகத்திடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள “கோட்ட கோ கம” போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றியமை  தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் ந​டைபெறவுள்ளது. நாளை மறுதினம் 27ஆம் திகதி இது தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

ரணிலை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் இருந்த போது, 2007 ஆம் ஆண்டில், மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இலங்கை்கு வழங்கும் நிதி உதவிகளை கைவிடுமாறு, ஜப்பானிடம் ரணில் விக்கிரமசிங்க கேட்டிருந்தார் என விக்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் அந்த கோரிக்கையை நிராகரித்திருந்த ஜப்பான், தலைவர்களால் இழைக்கப்படும் தவறுகளுக்காக ஸ்ரீ லங்கா மக்களை தண்டிக்கக் கூடாது என ஜப்பான் பதிலளித்துள்ளதாக விக்கிலீக்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.   

ஆட்டம் ஆரம்பம்!

(ச.சேகர்)

சம்பவத்தின் பின்னணியில் மூன்று காரணிகள் இருக்கலாம்.
அரசியலமைப்பையும் சட்டத்தையும் கடுமையாக பின்பற்றுபவர் என்பதற்கு மற்றுமொரு உதாரணம்?
பொருளாதார சிக்கலை சீர் செய்யும் இயலாமைக்கு காரணம் காண்பிப்பதற்காக இவ்வாறான போராட்டங்களை தொடர்ந்து பேணுவதற்கான ஒரு சதி?
ராஜபக்சர்களை மீண்டும் அரசியல் களத்துக்கு கொண்டு வருவதற்கான அடித்தளத்தின் ஆரம்பம்?

அவசர நிலை பிரகடனம்

உலகளாவிய ரீதியில் குரங்கு அம்மை பரவும் வேகம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது

விலைகள் விரைவில் குறையும் சாத்தியம்?

எதிர்வரும் நாட்களில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.  திறந்த கணக்கின் ஊடாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர்  நளின் பெர்னாண்டோ, சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


68-வது தேசிய விருதுகள்: சிறந்த நடிகர் சூர்யா; ஆதிக்கம் செலுத்திய ‘சூரரைப்போற்று’

2020-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த படம் எந்தெந்த பிரிவுகளில் விருதுகளை பெற்றுள்ளது என்பதைப் பார்ப்போம்.

சிறந்த படம்: ‘சூரரைப்போற்றுபடத்துக்கு சிறந்த படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகர்: இந்த விருது இரண்டு நடிகர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சூரரைப்போற்று படத்துக்காக சூர்யாவுக்கும், ‘தி அன்சங் வாரியர்’ படத்துக்காக அஜய் தேவ்கன்னுக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகை: ’சூரரைப்போற்று’ படத்துக்காக அபர்ணா பாலமுரளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.