விவசாயிகளைப் பந்தாடும் யானைகள்

(க. விஜயரெத்தினம்)

“மனிதர்களின் வாழ்வுரிமையை யானைகள் பறிக்கின்றன. ஆனால், யானைகளைத் துன்புறுத்துவதும் கொல்வதும் தண்டனைக்கு உரிய குற்றங்களாகும். வெடிகள் போன்றவற்றுக்கு யானைகள் பழக்கப்பட்டு இருப்பதால் இவற்றை விரட்ட வித்தியாசமாக சிந்தித்து செயற்பட வேண்டி உள்ளது. பனை ஓலைகளில் நெருப்பை கொளுத்தி எறிந்தால், யானைகள் மிரண்டு ஓடி விடும்” என்று தனது அனுபவத்தில் கண்டு கொண்டதை விவரித்தார் அம்பாறை, காரைதீவைச் சேர்ந்த ஓய்வு நிலை பிரதி அதிபரும் விவசாய ஆர்வலருமான எஸ். தில்லையம்பலம்.

‘பாசத்திற்கான யாத்திரை’ நல்லூரில் இருந்து ஆரம்பம்

அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக பாசத்திற்காக யாத்திரை எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்து பேரணி ஆரம்பமாகியுள்ளது.

குரங்குஏற்றுமதி: முற்றுப்புள்ளி வைத்தது சீன தூதரகம்

இலங்கையில் இருந்து 100,000 டோக் குரங்குகளை சீன தனியார் நிறுவனத்திற்கு ஏற்றுமதி செய்வதற்கான கோரிக்கை குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என்றும், இது தொடர்பில் எந்தவொரு தரப்பிடமிருந்தும் விண்ணப்பம் கிடைக்கவில்லை என்றும் கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

தயார் நிலையில் இராணுவத்தினர்

கண்டி, அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கண்டன அறிக்கை

(Theva Thasan Facebook இல் இருந்து பெறப்பட்டது)

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிபிசி யின் சிங்களச்சேவையானது யாழ்ப்பாணத்தில் இருக்கும் சாதிய ஒடுக்குமுறை பற்றிய தகவல்களை ஒடுக்கப்படும் மக்கள் பிரிவினரில் சிலரது வாக்குமூலங்களுடாக வெளிக்கொணர்ந்தது.

பர்தா -1

(MYM Siddeek)

அறிவீனமா அல்லது பெண்ணுரிமைக்கு எதிரான அடக்குமுறையா ?
அறியாததை முழுவதும் அறியாமல் பேசுவதையே அறிவீனம் என்கின்றோம் ! இது அறிவிலிகள் காலத்து மக்களின் நிலையாக இருந்தது. அதே காலத்திலேயே சிலர் இன்னும் இந்த 21ம் நூற்றாண்டிலும் வாழ்வது ஆச்சரியமானதும் சகிக்க முடியாததும் ஆகும்.

சூடானில் அதிகரிக்கும் மோதல்; 200 பேர் பலி

சூடானில் இராணுவத்துக்கும், துணை இராணுவத்துக்கும், இடையே நடைபெற்று வரும் மோதலில், பொதுமக்கள் 200 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இதுதவிர 1800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

’Forbes’ இல் இடம் பிடித்த இலங்கை

ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த, சர்வதேச ரீதியில் சுற்றுலாத்துறையில் செல்வாக்கு செலுத்தும் (Influencer) பிரபல ஆளுமையான ஜூலியானா, 2023 இல் பயணம் செய்யக் கூடிய சிறந்த இடங்கள் பட்டியலில் இலங்கையைப் பரிந்துரை செய்துள்ளார்.

அரை சொகுசு பேருந்து தடை: பயணிகளுக்கு கிடைத்த வெற்றி

பயணிகளின் கடும் கண்டனத்துக்கு உள்ளான மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையாக இயங்கி வந்த அரை சொகுசு பஸ் சேவையை அடுத்த மாதம் முதல் இரத்து செய்ய தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றது.

தமிழ்நாடு – தலைமன்னாருக்கும் சுரங்கப்பாதை வேண்டும்

தமிழ்நாட்டையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடிக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.