நான் LTTE அமைப்பில் இருந்தவன்; எச்சரித்த பிள்ளையான்

மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் மகாவலி மற்றும் மேச்சல்தரை  தொடர்பான விசேட கூட்டம்  மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது. இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரும் மாவட்ட அபிபிருத்திகுழு தலைவருமான இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்  கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று நாட்டின் நிலமை என்ன? பொருளாதார நிலை என்ன? வெளிநாட்டு மக்கள் நிலை   எவ்வாறு?  என்ற விடையங்களை கதைக்க வேண்டும் அரசியலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு பக்கமாக கருத்து தெரிவிக்கின்றனர்.

நான் புலிகளில் இருந்தனான் வந்தனான் எங்களுடைய காணிகளை சிங்களவர்கள் அபகரித்ததால் யுத்தம் செய்தோம் இது நான் முதல் இருந்த நிலையை வைத்து இப்போது கதைக்க முடியாது  பிரயோசனமில்லை அதனால் தான் நான் அரசியலுக்கு வந்தேன்.

எங்கள் மக்களை ஒரு பக்கம் சமப்படுத்தவும் மறுபக்கம் அரசாங்கத்தை சமப்படுத்த வேண்டும் அதற்காக இரு பகக்கமும் ஒன்றிணைந்து விசேடமாக ஜனாதிபதியுடன் கதைத்து பேசி நாட்டின் சட்டங்களை மாற்றவேண்டும். அதனை மாற்றுவதற்கு வேலை செய்யவேண்டும் இல்லாவிடில் வேலையில்லை.

நான் சண்டைபிடிக்க வரவில்லை கிழக்கில் யுத்தம் முடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவின் பண உதவியுடன் ஆடைத்தொழிற்சாலை மற்று பால்உற்பத்தி பண்ணைக்கு இடம் கொடுக்கப்பட்டது.

இந்த சிஜசி கம்பனி இப்போது என்ன செய்கிறார்கள். இப்போது வேலை செய்யவில்லை என்கின்றனர் இவர்களுக்கு வழங்கிய பணம் யாருடைய பணம் ? இவர்கள் அமெரிக்காவை ஏமாற்றி அரசாங்கத்தை ஏமாற்றி எங்களை ஏமாற்றினார்கள் உண்மையில் ஏழை மக்கள் பாவம் சிஜசி கம்பனி கள்வர்கள்.

நாட்டின்  நிருவாக முறை மாற்றவேண்டும் என அறகலயினர் ஆர்ப்பாட்டம் செய்தனர் மகாவலி மாறியதா? ஆசிரியர்கள் மாறியதா? அரசியல்வாதிகள் மாறியதா? ரியூசன் ஆசிரியர் மாறியதா? வேலை இல்லையே, ?இவ்வாறு எதுவுமே மாற்றாமல் எல்லாத்தையும் சமனாக்கு என்றால் எப்படி சமனாகும்.

எனவே மாவட்ட  நிருவாக அதிகாரிகள் அரசியல் நிருவாக அதிகாரிகள் கலந்துரையாடி எதிர்கால திட்டம் நாங்கள் என்ன செய்ய வேண்டும் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதை யோசியுங்கள்

1983 க்கு முன்னர் மகாவலி காணி இடம் தேவை எந்த இடம்வேண்டுமாயின் அதனை எடுக்க முடியும் அமைச்சருக்கு அது அந்த காலம் இப்ப எப்படி எனவே இந்த மகாவலி திட்ட பகுதியில் மண் அகழ்கின்றனர் இதை யார் அகழ்கின்றார்கள்? எனவே இவ்வாறன சில விடையங்களை நிறுத்துமாறு உங்கள் அமைச்சருக்கு உங்கள் பணிப்பாளரிடம் தெரிவியுங்கள் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.