சர்ச்சையை கிளப்பும் இந்தியாவின் 29ஆம் பிராந்திய சர்ச்சை

இலங்கையின் அரசியலில் அண்டைய நாடான இந்தியாவின் தலையீடு நேரடியாகவும், மறைமுகமாகவும் நீண்ட காலமாகப் பேணப்படுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.

யாழ்.கோவில்களுக்கு செல்ல இராணுவம் அனுமதி

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு உட்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள ஏழு இந்து கோவில்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

20 வீதத்திற்கும் மேலாக குறைக்கப்படும் மின் கட்டணம்

மின் கட்டணத்தை இருபது வீதத்துக்கும் மேல் குறைக்க வேண்டும் என பாராளுமன்ற மேற்பார்வைக் குழு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

பறவைகளிடமிருந்து நாம் சில பாடங்களை படிப்போம்…

1. இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை. 🦜

2. இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை. 🦜

3. தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் வாழ்க்கைக்கான பயிற்சிகளை அளிக்கின்றன. 🦜

4. மூக்குமுட்ட உண்ணுவதில்லை. எவ்வளவு தானியங்களை இட்டு கொடுத்தாலும் தேவையானவற்றை மட்டும் கொத்திவிட்டு பறந்து செல்கின்றன. போகும் போது எதையும் எடுத்து போவதில்லை. 🦜

5. இருள் சூழும்போதே உறங்க துவங்குகின்றன. அதிகாலை ஆனந்தமாய் பாட்டு பாடி எழுகின்றன.🦜

6. தனது ஆகாரத்தை அவை மாற்றுவதில்லை. 🦜

7. தனது உடலில் வலுவுள்ளவரை உழைக்கின்றன. இரவு அல்லாது மற்ற நேரங்களில் ஓய்வு எடுப்பதில்லை. 🦜

8. நோய் வந்தால் உண்ணுவதில்லை. சுகமான பின் உணவு எடுத்துக்கொள்கிறது. 🦜

9. தன் குழந்தைகளுக்கு பரிபூரணமான அன்பை கொடுத்து வளர்க்கின்றன. 🦜

10. கடுமையான உழைப்பாளிகளாயிருப்பதால், இதயம், கல்லீரல், நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுவதில்லை. 🦜

11. இயற்கைக்கு எதிராக ஒருபோதும் செயலாற்றுவதில்லை. தனது அத்தியாவசிய தேவைக்கு மட்டும் இயற்க்கையிலிருந்து பெற்று கொள்கின்றன. 🦜

12. தனது கூடு மற்றும் சுற்று சுற்று சூழல்களை அனுசரனையோடு பாதுகாக்கின்றன.

🦜இதில் சில படிப்பினைகளையாவது நாம் பாடமாக எடுத்துக்கொண்டால் வாழ்வு சிறப்பது திண்ணம். 🦜🦢

பெஞ்சமின்

தமிழ்ப் பெண்புலியும், என்/எங்கள் அனுபவங்களும்…

“நிரோமியின் தாயார் இந்திய வம்சாவளியினராய் இருந்தததால் நிரோமியின் தாயை, தகப்பனின் உயர்சாதி சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதே இருக்கின்றது. 77ம் கலவரத்தின் பின் நோர்ட்டன் பிரிட்ஜிலிருக்கும் தகப்பன் இனி சிங்களப்பகுதியிற்குள் இருப்பது ஆபத்தென யாழ்ப்பாணத்திற்கு இவர்களை அனுப்பிவிட்டு வேலைக்க்காய் மத்திய கிழக்கிற்குப் போய்விடுகின்றார்.

தோழர் ஆர்ஆர் இராகவன்

(தோழர் ஜேம்ஸ்)

முதல் சந்திப்பே…..? கடைசிச் சந்திப்பாக அமையும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் இதற்கு முன்பு அவரை சந்தித்தேனா….? என்பதை என் ஞாபகத்திற்கு வரும் அளவிற்கு என்னால் தற்போது தடங்களை என் மனதிற்குள் பெற முடிவில்லை.

தூசண வார்த்தையால் வேலை நிறுத்தம்: விமான பயணிகள் பாதிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் அடிக்கடி தாமதம் மற்றும் இரத்துச் செய்யப்படுவதால், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் தூசண வார்த்தை பிரயோகங்களை சகித்துக்கொள்ள முடியாமல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை (25) காலை உடனடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் என  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர சேவைகள் சங்கத்தின் தலைவர் ஜனக்க விஜயபத்திரண  தெரிவித்தார்.

இன்று உலக தாய்மொழி தினம்

(பெரியசாமிப்பிள்ளை செல்வராஜ் – முன்னாள்  தூதுவர் மஸ்கெலியா)

ஓர்  இனத்தின் அடையாளமாக விளங்குவது மொழி.  மொழியினது வளர்ச்சியினை சார்ந்தே அந்த இனத்தின் கலை,  கலாசார, சமூக, பண்பாட்டு அம்சங்கள் வளர்ச்சியுறுகின்றன.

தமிழர்களது இனப்பிரச்சினையில் ஜே.வி.பி.

(லக்ஸ்மன்)

இந்திய – இலங்கை உடன்படிக்கையின் மூலம் 1987 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் செயற்படும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வழக்குத் தொடர்ந்ததன் அடிப்படையில் 2006 ஒக்ரோபர் 10ஆம் திகதி வடகிழக்கு இணைப்பு செல்லாது மற்றும் சட்டவிரோதமானது என்ற அறிவித்தல் வந்தது. இது ஜே.வி.பி யின் தமிழர்கள் விடயம் தொடர்பான நிலைப்பாட்டை எடுத்துக்காட்டும்.