இன்றும் நாட்டில் பல தடவைகள் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் போர்: அமெரிக்கா இன் முடிவு…?

இஸ்ரேல் – ஈரானுக்கு இடையில் கடுமையான மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதலில் அமெரிக்கா ஈடுபடுமா என்பது குறித்து ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அடுத்த இரண்டு வாரங்களில் முடிவெடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது லீட்ஸில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது.

2025 முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 90% அதிகரிப்பு

2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் சபைக்கு முடிந்துள்ளது.

டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பினர்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர்   டில்வின் சில்வா உட்பட இலங்கை பிரதிநிதிகள் 29 பேர், நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைக் காண 10 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு  கட்டுநாயக்க விமான நிலையத்தை வியாழக்கிழமை (19) இரவு வந்தடைந்தனர்.

85 சீன பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்

இந்த நாட்டில் தங்கியிருந்தபோது சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 85 சீன நாட்டவர்கள் உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு, வௌ்ளிக்கிழமை (20)  அதிகாலையில் சிறப்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நாடு கடத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

திருகோணமலையில் நாபா தோழரின் திருவுருவச் சிலைக்கு அஞ்சலி

திருகோணமலையில் உள்ள எமது அலுவலகத்தில் உள்ள பத்மநாபா தோழரின் திருவுருவச் சிலைக்கு இன்று மாலை மலர் மாலை அணிவித்து தோழர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நேற்றைய தினம் சாம்பல் தீவில் இத்தோழர்கள் சிரமதானம் செய்தது குறிப்பிடத்தக்கது.