கட்டுப்பாட்டை மீறினால்? ஜனாதிபதியின் அறிவிப்பு

அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்காத பெரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களின் களஞ்சியசாலைகளைக் கைப்பற்றி அவசரகால விதிமுறைகளின் கீழ் கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

உறுதிமொழிகளை தலிபான்கள் காப்பாற்றுவார்களா?

ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்களான தலிபான்களின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றபடி மிகவும் பிரபலமான தனியார் தொலைக்காட்சி வலைத்தளம் அதன் அபாயகரமான துருக்கி சோப் ஒப்பேரா மற்றும் இசை நிகழ்ச்சிகளை டேமர் நிகழ்ச்சியுடன் இணைத்துள்ளது. தலிபான்கள் தமது எண்ணங்களுக்கு ஏற்ப ஊடகங்களுக்கு சட்டதிட்டங்களை வெளியிட்டுள்ளனர்.

’இஸ்லாமிய எமிரேட்’ உதயம்: புதிய பிரதமராக முல்லா நியமனம்

ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசாங்கத்தை அறிவித்துள்ள தலிபான்கள், அந்த நாட்டை “இஸ்லாமிய எமிரேட்” என்று அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் இடைக்கால பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த்  இருப்பார் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். 

மம்மூட்டி

(Rathan Chandrasekar)

இப்போது அல்ல. 87, 88 இருக்கும்.
தூர்தர்ஷனில் மம்மூட்டியை நேர்காணுகிறார்கள்.
சினிமா எனக்குத் தொழில். என்னை ரசிக்கலாம். ஆராதிக்கக்கூடாது என்கிற மாதிரியே சென்றுகொண்டிருந்த அந்தப் செவ்வியில் – அவரை “கேரளத்தின் சூப்பர் ஸ்டாரான நீங்கள்….” என்றபடி, எதுவோ கேட்க முற்படுகிறார் நேர்காணுகிறவர்.
மம்மூட்டி சொல்கிறார் :
“நான் கேரள சினிமாவின் சூப்பர் ஸ்டார் அல்ல. மோகன்லால்தான் அங்கே சூப்பர் ஸ்டார்!”

தலிபான்கள் அதிரடி மாணவிகளுக்கு நிகாப் கட்டாயம்

ஆப்கன் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள் கட்டாயம் முகத்தை முழுவதுமாக மூடி அபாயா மற்றும் நிகாப் அணிய வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் வகுப்புக்கள் பால் இன ரீதியில் பிரிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் திரையினால் மறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

மறைந்திருக்கும் வெடிபொருட்கள்: இன்னும் அதிரும் மண்

(சுப்பிரமணியம் பாஸ்கரன்)

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு போரிலும், போருக்கு பின்னரான காலத்திலும் கண்ணிவெடிகளின் ஆபத்து சவால் மிக்கதாகவே உள்ளது.

நியூசிலாந்தின் முன்மாதிரியான அணுகுமுறை

(மொஹமட் பாதுஷா)

ஒருகாலத்தில் நியூசிலாந்து என்றால் ‘முழுஆடைப் பால்மா’ ஞாபகத்துக்கு வரும். ஆனால், கடந்த சில வருடங்களாக, நியூசிலாந்து என்ற பெயரைக் கேட்டதும் கண்முன்னே வருவது, அந்நாட்டின் பிரதமரும் அவரது ஆளுகையுமாகத்தான் இருக்கும். 

இலங்கை: கொரனா செய்திகள்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 184 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 97 ஆண்களும் 87 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்ட 134 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 46 பேர் மரணித்துள்ளனர். 30க்கு கீழ்பட்டோரில் 4 பேரும் மரணித்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 10,504 பேர் உயிரிழந்துள்ளனர்.

வ.உ.சி. 150

ஆங்கிலேயர் அஞ்சிய எலும்புகள்

வ.உ.சி.க்கு எதிரான அரச நிந்தனை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து ஆங்கிலேய நீதிபதி ஏ.எஃப். பின்ஹே 1908 ஜூலை 7-ல் தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில், ‘இவர் வெறுக்கத்தக்க ராஜதுரோகி. இவருடைய எலும்புகள்கூட, சாவுக்குப் பின் ராஜதுவேஷத்தை ஊட்டும்…’ என்று குறிப்பிட்டிருந்தார். அவர் இப்படிக் குறிப்பிட்டதற்குக் காரணம் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வ.உ.சி. உருவாக்கியிருந்த எழுச்சி.

இந்தியா இங்கிலாந்து மண்ணில் வெற்றி

இங்கிலாந்து மண்ணில் இந்தியா இங்கிலாந்தை வென்றுள்ளது டெஸ்ட் போட்டியில். ரோகித் சர்மாவின் வெளிநாட்டு மைதானத்தில் எடுத்த சதம் அடித்தளம் இட்டுக் கொடுக்கு இந்திய பந்து வீச்சாளர்களின் திறமையான செயற்பாடு இந்த வெற்றியை இந்தியா பெறக் காரணமாகியிருக்கின்றது. ஒரு எதிர்பாராத மகத்தான நாள்! கொண்டாட்டமான நாள்! பும்ரா, ஷர்துல், ஜடேஜா, உமேஷ் – முழுக்க பந்துவீச்சாளர்களின் உழைப்பால் சாத்தியமான வெற்றி. கோலியின் சோர்வற்ற அணுகுமுறை, தன்னம்பிக்கை, புத்திசாலித்தனமான கள அமைப்பையும் பாராட்ட வேண்டும்.