’நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி கொரோனாவிலிருந்து பாதுகாப்போம்’

வீடுகளில் இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய பொருள்களைக் கொண்டு, நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பெருக்கிக் கொள்வதன் மூலம் கொரோனா போன்ற தொற்று நோய்களில் இருந்து எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும் என, நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி தொற்றா நோய் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

கொரனா காலத்தில்: அரசு இயல், அரிசி இயல், அரசி இயல்.

(சாகரன்)

இந்தப் பேரிடர் காலத்தில் அரசியலை பேசுவதை தவிர்போம் என்ற விரதத்தில்தான் இருந்தேன். அரசியல் வேறுபாடுகளை மறந்து மக்கள் ஒருகிணைந்து இந்த பேரிடரை எதிர் கொண்டு வெல்ல வேண்டும் என்பதற்கான ஐக்கியத்தின் ஒரு குறியீடாக செயற்பட நினைத்ததில் தவறுகள் இல்லைதானே.

தூய்மைப் பணியாளர்களின் ஈடில்லா உழைப்பை மக்கள் உணர்ந்துள்ளனர்!- பி.ஆர்.நடராஜன் எம்.பி. உருக்கம்

கோவை எம்.பி.யான பி.ஆர்.நடராஜன் கோவை மாவட்டத்தில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்து பாராட்டுகளைத் தெரிவித்ததோடு அவர்களுக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள முகக் கவசங்களையும் வழங்கினார்.

ஐ. அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து சாண்டர்ஸ் விலகல்

ஐக்கிய அமெரிக்காவில் இவ்வாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான போட்டியிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் செனட்டரான பேர்ணி சாண்டர்ஸ் இன்று விலகியுள்ளார். அந்தவகையில், இவ்வாண்டு நவம்பர் மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் எதிர்கொள்வார் எனக் கருதப்படுகிறது.

சகலருக்கும் பரிசோதனை?

இலங்கையிலிருக்கும் சகலருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனையை முன்னெடுப்பதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், ஏற்றுக்கொள்ளக்கூடிய முறைமையைத் தயாரிப்பதற்காக, பிரதிச் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அமல் ஹர்ஷ டீ சில்வா தலைமையிலான நால்வர் அடங்கிய குழுவொன்றையும் சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.

அபிவிருத்திவாக்குறுதிகளைஅளித்த ராஜபக்சக்கள் அவற்றைசாதனைகளாக்குவதுபெருஞ் சோதனையே!

(அ. வரதராஜா பெருமாள்)
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்துபுதிய ஜனாதிபதியும் பதவியேற்று 75 நாட்கள் கடந்துவிட்டன. 2015 ஜனவரிக்கும் 2019 நவம்பருக்கும் இடைப்பட்டஐந்துவருடகாலரணில் – மைத்திரிஅரசாங்கம்
நாட்டின் அபிவிருத்திமற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவிடயங்களில் செயற்திறனற்றதாக இருந்தமையும் ஏப்ரல் 21ல் மிகமோசமானவகையாகஅப்பாவிப் பொதுமக்கள் மீதுபாரியபயங்கரவாதத் தாக்குதல் நடக்கும் அளவுக்குஅந்தஅரசாங்கம் பாதுகாப்புவிடயத்தில் கையாலாகாதஒன்றாக இருந்தமையுமேஅந்தஅரசாங்கத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தனஎன்பதுஅனைவருக்கும் தெரிந்தவிடயம்.

‘நமக்கு முதலிடம்; மற்றயைவர்களுக்கு இரண்டாமிடம்’

இந்தியப் பிரஜைகளின் தேவைகளுக்கான கையிருப்புகளை வைத்துக்கொண்டே, மற்றைய நாடுகளுக்கு மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படல் வேண்டும் என, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, மத்திய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

கொரனா வைரஸ் இன் வீச்சு… ஏப்ரல் மாத நடுப் பகுதியில் அடங்க ஆரம்பிக்குமா……?

(சாகரன்)

கொரனா வைரஸ் 2019 கடைசி மாதத்தில் சீனாவில் அறியப்பட்டதாக செய்திகள் கூறி நிற்கின்றன. சீனா இந்த வைரசின் வீரியத்திற்குள் அறியப்பட்ட நாளில் இருந்து முதல் ஒரு மாதத்திற்குள் மிக மெதுவாகவே பரவத் தொடங்கியது. அதாவது டிசம்பர் 3 வது கிழமையில் இருந்து ஜனவரி 3 வது கிழமை வரை அதிக பாய்ச்சலைக் காட்டவில்லை. ஆனால் ஜனவரி 3வது கிழமையிலிருந்து பெப்ரவரி 3 வது கிழமை வரை தனது காட்டத்தைக் காட்டி இதன் பின்பு தனது தணிதலை மெது மெதுவாக காட்டி இன்று கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கும் நிலையை அடைந்திருக்கின்றது எனலாம்.

அமெரிக்கா வெனிசுலா, கியூபா, நிகரகுவா மற்றும் ஈரானுக்கு எதிரான ஆயுதமாக கோவிட் -19 ஐ மாற்றியது

ஈரான், வெனிசுலா, கியூபா மற்றும் நிகரகுவா ஆகியவற்றுக்கு எதிரான புதிய கொரோனா வைரஸை அமெரிக்கா ஒரு ஆயுதமாக மாற்றியதாக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஆலிவர் ஸ்டோன் குற்றம் சாட்டியுள்ளார், அமெரிக்கா கட்டாய மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை அமெரிக்கா விதித்துள்ள நாடுகளில், ஹிஸ்பான் மேற்கோள் காட்டிய நியூயார்க் டெய்லி நியூஸ் வெளியிட்டுள்ள கட்டுரை

கொரோனா வைரஸுக்குப் பின் இந்த புவி எப்படி இருக்கும்? மீண்டும் காட்டுமிராண்டி நிலைக்கே செல்வோமா?

(சைமன் மெயர்)

 (கொரோனா வைரஸ் உலகை எவ்வாறு மாற்றும் என்பது குறித்து பிபிசி தமிழில் வெளியிடப்பட்டு வரும் இரண்டு பகுதிகள் கொண்ட கட்டுரை தொகுப்பின் முதல் பகுதி இது.)

இப்போதிருந்து 6 மாதத்தில், ஓராண்டில், 10 ஆண்டுகளில் நாம் எங்கே இருப்போம்? என் அன்புக்குரியவர்களுக்கு, பலவீனமான நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசித்தபடியே இரவில் நான் தூங்காமல் விழித்திருந்தேன், நான் தொலைவிலிருந்தபடி வேலை செய்ய முடியும். நோய்வாய்ப்பட்ட காலத்துக்கு எனக்கு நல்ல ஊதியம் கிடைக்கும். இப்படி நான் ஒரு அதிர்ஷ்டவசமான ஆள்தான். ஆனாலும் என் வேலைக்கு என்ன ஆகும் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.